சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவரை சந்தித்து ஜஸ்வர் உமர் பேச்சு

Published By: Vishnu

23 Oct, 2022 | 03:42 PM
image

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ மற்றும் ஜஸ்வர் உமர் ஆகியோருக்கு இடையேயான விசேட சந்திப்பு இந்த வாரம் நடைபெற்றது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கால்பந்தாட்ட நெருக்கடி குறித்து இதன் போது பரவலாக பேசப்பட்டது.

இந்த நெருக்கடியானது ஒரு சிறு குழுவினரால் உருவாக்கப்பட்டதே தவிர விளையாட்டுத்துறை அமைச்சரின் தலையீட்டால் உருவாக்கப்பட்டதல்ல என்பது என்பது தொடர்பில் தெளிவான தகவல்கள்  முன்வைக்கப்பட்டுள்ளன.

தேர்தலில் வெற்றிபெற முடியாத மிகச்சிறிய குழு  இலங்கை கால்பந்தாட்டத்தை அழிக்க சதி செய்கிறது என்பதை முழு நாடும் இப்போது உணர்ந்துள்ளது.

இந்தக் சிறிய குழுவுக்குப் பின்னால் கால்பந்தாட்ட முன்னாள் பலமான நபர் இருப்பது உலகம் முழுவதற்கும் தெரியவந்துள்ளது.

ஜஸ்வர் உமரின் கோரிக்கைக்கு அமைய இலங்கை கால்பந்து மீதான தடையை தாமதப்படுத்துவதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) தெரிவித்துள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சருடன் பேசி இந்த நெருக்கடியை  தலையிட்டு தீர்த்து வைப்பதாக FIFA தலைவரிடம் ஜஸ்வர் உமர் உறுதியளித்துள்ளார்.

 52 லீக்குகள் தனக்கு ஆதரவாக இருப்பதாகவும்  9 லீக்குகள் மட்டுமே எதிர் அணியுடன் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஜஸ்வருடன் இணைந்துள்ள 52 லீக்குகளும் இலங்கையை சர்வதேச தடையில் இருந்து காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சட்ட ரீதியிலான நிவாரணம் கோரி உள்ளன.

2/3 பெரும்பான்மையான லீக்குகள்  இடையீட்டுத் தரப்பாக  இந்த வழக்கில் தலையிட்டு, முன்கூட்டியே தேர்தலை நடத்துமாறு கோரி உள்ளன.

  விரைவில்  விளையாட்டுத்துறை அமைச்சரை சந்திக்க தனது தரப்பு ஆவலுடன் இருப்பதாக.   ஜஸ்வர் உமர் தெரிவித்தார் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீரர்களின் அபார ஆற்றல்களால் இலங்கை அமோக...

2025-02-14 19:11:52
news-image

ஆஸி.யை மீண்டும் வீழ்த்தி தொடரை முழுமையாக...

2025-02-14 00:18:39
news-image

ஐசிசி ஒழுக்க விதிகளை மீறிய பாகிஸ்தானியர்...

2025-02-13 19:28:02
news-image

கில் அபார சதம், கொஹ்லி, ஐயர்...

2025-02-13 18:17:21
news-image

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண சிறப்பு தூதுவர்களாக...

2025-02-13 17:23:02
news-image

மாலைதீவில் கராத்தே பயிற்சி மற்றும் தேர்வு

2025-02-13 10:26:53
news-image

சுவிட்சர்லாந்தில் கராத்தே பயிற்சி பாசறை

2025-02-13 10:43:37
news-image

சரித் அசலன்க சதம் குவித்து அசத்தல்;...

2025-02-12 18:57:16
news-image

இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்குப் பின்னர் குனேமானின்...

2025-02-12 12:02:33
news-image

உலகக் கிண்ணத்துக்கு சிறந்த அணியை கட்டியெழுப்புவதை...

2025-02-11 19:22:29
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை...

2025-02-11 09:21:46
news-image

ரோஹித் ஷர்மா 32ஆவது ஒருநாள் சதம்...

2025-02-10 12:42:11