சிறைச்சாலை கட்டளைச்சட்டத்தின் கீழ் அரசாங்கம் உருவாக்கியுள்ள புதிய விதிமுறைகள் சிறைக்கைதிகளின் உரிமைகளை மீறும் வகையில் அமைந்துள்ளன என மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை கட்டளைச்சட்டத்தின் கீழ் அரசாங்கம் புதிய சிறைச்சாலை விதிகளை வகுத்துள்ளது என அவர் தனதுடுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
புதிய சிறைச்சாலை விதிமுறைகள்; கைதிகளின் உரிமைகளை மீறுகின்ற வகையில் காணப்படுகின்றன என குறிப்பிட்டுள்ள அவர் தடுப்புக்காவலில் உள்ளவர்களை பார்ப்பதற்கான அனுமதியை வாரத்தில் ஆறுநாட்கள் என்பதிலிருந்து ஒரு நாளிற்கு குறைப்பது என்ற விதிமுறை அதிக கரிசனையை அளிப்பதாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
சிறைக்கூண்டிற்குள் இருக்கவேண்டிய நேரத்தை நாளொன்றிற்கு 23 மணித்தியாலங்களாக அதிகரிப்பது உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
சமைத்த சமைக்கப்படாத உணவுவகைகளை தடை செய்வது குறித்த விதிமுறைகள் காரணமாக குடும்பங்கள் உணவுகளை வழங்க முடியாத நிலையேற்படும் என தெரிவித்துள்ள அம்பிகா சற்குணநாதன் சிறைச்சாலை உணவு உண்ணமுடியாததாக காணப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM