பொலிஸ் மா அதிபர் உட்பட 20 பேருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு

Published By: Vishnu

23 Oct, 2022 | 11:51 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன உள்ளிட்ட 20 பொலிஸ் உயரதிகாரிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கம் அறிவித்த அதி உயர் பாதுகாப்பு வலய பிரகடனத்துக்கு எதிராக கடந்த செப்டம்பர் 24 ஆம் திகதி அமைதியான போராட்டத்திற்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு   உயர் நீதிமன்றத்தில் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன்,  கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர்  ஏ.ஜி.ஏ. சந்ரகுமார,  கொழும்பு வடக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்  பி.ஆர்.எம். அம்பேபிட்டிய,  கொழும்பு தெற்கு பொலிஸ் அத்தியட்சர்  ஜி.எம். மாரப்பன,  கொழும்பு மத்தி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் டயஸ்ம, , மருதானை, டாம் வீதி, கோட்டை, கறுவாத்தோட்டம் உள்ளிட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகல் என 26 பேர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

சோசலிச இளையோர் சங்கத்தின் 6 செயற்பாட்டாளர்கள் தாக்கல் செய்துள்ள இம்மனுவில், 20 பொலிஸ் அதிகாரிகள்  பிரதிவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளமை விஷேட அம்சமாகும்.

இதுவரை இரு மனுக்கள் இந்த விடயத்தில் தாக்கல் செய்யப்ப்ட்டுள்ளன. கடந்த ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியும் நேற்று முன்  தினமும் இது தொடர்பாக  இரண்டு மனுக்கள் இவ்வாரு தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

தாக்குதல் நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர்களையும் அதற்கு கட்டளையிட்ட பொலிஸ் அதிகாரிகளையும் காணொளி மூலம் அடையாளம் கண்டதாக மனுதாரர்கலின்  சட்டத்தரணி சுனில் வட்டகல குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான்கு மனித படுகொலைகளுடன் தொடர்புடைய  சந்தேகநபர்...

2025-03-20 03:06:26
news-image

அர்ச்சுனா எம்.பி குறித்த சபாநாயகரின் தீர்மானத்தை...

2025-03-20 02:55:15
news-image

கட்சியின் உள்ளக பிரச்சினைக்கு தீர்வு காண...

2025-03-20 02:51:31
news-image

ரணிலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது...

2025-03-19 16:04:51
news-image

பட்டலந்தவில் சித்திரவதை புரிந்தவர்களுடன் அரசாங்கத்துக்கு ‘டீல்’...

2025-03-19 17:21:51
news-image

சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காத உணவகத்திற்கு எதிராக...

2025-03-19 22:52:48
news-image

8 இலட்சத்து 33 ஆயிரம் பேருக்கு...

2025-03-19 21:51:24
news-image

போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஜோசப் ஸ்டாலின்...

2025-03-19 17:16:13
news-image

இளைஞர்களுக்கு சந்தர்ப்பமளிக்கவே இம்தியாஸ் பதவி விலகினார்...

2025-03-19 21:49:54
news-image

அத்தியாவசியப்பொருட்களின் விலைகளை குறைத்து நிவாரணம் வழங்குங்கள்...

2025-03-19 17:09:52
news-image

இவர் ஒரு குற்றவாளி – ஆனால்...

2025-03-19 22:05:38
news-image

உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக...

2025-03-19 21:45:57