சாம் கரன் 5 விக்கெட்டுளை கைப்பற்றிய போதிலும் ஆப்கானை போராடி வென்றது இங்கிலாந்து !

22 Oct, 2022 | 09:02 PM
image

(நெவில் அன்தனி)

அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் 8 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் சாம் கரன் முதலாவது 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்த போதிலும் ஆப்பகானிஸ்தானுக்கு எதிரான குழு 1 சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் மிகவும் சிரமத்துக்கு மத்தியிலேயே இங்கிலாந்து 5 விக்கெட்களால் வெற்றிபெற்றது.

பேர்த் விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 112 ஓட்டங்களைப் பெற்றது.

ஓட்டங்களைப் பெறுவதில் ஆரம்பம் முதல் சிரமத்தை எதிர்கொண்ட ஆப்கானிஸ்தான் 14 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 82 ஓட்டங்களைப் பெற்று   ஓரளவு நல்ல நிலையில் இருந்தது. கடைசி 6 ஓவர்களில் ஓட்டங்கள் குவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும் ஓட்டங்களுக்கு பதிலாக விக்கெட்கள் சரிந்தன.

இப்ராஹிம் ஸ்த்ரான் (32), உஸ்மான் கானி (30) ஆகிய இருவரே திறமையாக துடுப்பெடுத்தாடினர்.

ஏனையவர்களில் நஜிபுல்லா ஸத்ரான் (13), ரஹ்மானுல்லா குர்பாஸ் (10) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

இங்கிலாந்து பந்துவீச்சில் சாம் கரன் 3.4 ஓவர்கள் பந்துவீசி 10 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். இந்த பந்துவீச்சுப் பெறுதி இந்த வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியாக பதிவானது. அத்துடன் சாம் கரனின் அதிசிறந்த தனிப்பட்ட பந்துவீச்சு பெறுதியாகவும் அமைந்தது.

அவரை விட பென் ஸ்டோக்ஸ் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மார்க் வூட் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

சுமாரான மொத்த எண்ணிக்கையான 113 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 18.1 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து குறிப்பிட்ட வெற்றி இலக்கை அடைந்தது.

இங்கிலாந்தும் மந்தகதியிலேயே ஓட்டங்களைப் பெற்றது.

லியாம் லிவிங்ஸ்டன் ஆட்டமிழக்காமல் 29 ஓட்டங்களையும் அலெக்ஸ் ஹேல்ஸ் 19 ஓட்டங்களையும் அணித் தலைவர் ஜொஸ் பட்லர், டேவிட் மாலன் ஆகிய இருவரும் தலா 18 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஆப்கன் பந்துவீச்சில் பஸால்ஹக் பாறூக்கி, முஜீப் உர் ரஹ்மான், ராஷித் கான், பரீத் அஹ்மத், மொஹமத் நபி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58