22 ஆவது திருத்தச் சட்டமூலம் : வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாதோர் இவர்கள் தான் !

Published By: Vishnu

22 Oct, 2022 | 07:40 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பில்  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 26 பேரும்,13 எதிர்க்கட்சி உறுப்பினர்களும்,5 சுயாதின உறுப்பினர்களும் கலந்து கொள்ளவில்லை.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 179 வாக்குகளும்,எதிராக ஒரு வாக்கும் பதிவு செய்யப்பட்டன.

சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது ஐக்கிய மக்கள் சக்தி,ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி,மேலவை இலங்கை கூட்டணி,சுதந்திர மக்கள் காங்சிரஸ் ஆகிய கட்சிகள் மற்றும் கூட்டணிகளின் உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தார்கள்.

மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களான அநுரகுமார திஸாநாயக்க,விஜித ஹேரத் மற்றும் ஹரினி அமரசூரிய ஆகிய மூவரும் 22ஆவது சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்கள்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணதுங்க,மஹிந்த அமரவீர,பிரமித்த பண்டார தென்னகோன்,சனத் நிஷாந்த,சிறிபால கம்லத்,அனுராத ஜயரத்ன,சீதா அரம்பேபொல,ஜோன்ஷ்டன் பெர்னான்டோ,பவித்ரா வன்னியராட்சி,காமினி லொகுகே,ஜனக பண்டார தென்னகோண்,நிபுண ரவனக,

எஸ்.எம்.சந்திரசேன,ரோஹித அபேகுவர்தண,விமலவீர திஸாநாயக்க,தம்மிக பெரேரா,எம்.எம்.முஸாரப்,ஜயந்த கெடகொட,சாகர காரியவசம்,ரஞ்சித் பண்டார ஆகியோர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் ஜி.எல்.பீரிஸ்,உபுல் கலபதி,அங்கஜன் இராமநாதன்,சான் விஜயலால் சில்வா மற்றும் திஸ்ஸ விதாரன ஆகியோர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களான ஆர்.சம்பந்தன்,அப்துல் ஹலீம்,வடிவேல் சுரேஷ்,வினோ நோக இராதலிங்கன்,கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன்,ஹெக்டர் அப்புஹாமி,வேலுகுமார்,ஹேஷா விதானகே.எம்.ஏ.சுமந்திரன்,சாணக்கியன்,நவராஜா கலையரசன் ஆகியோர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47