அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த 8 ஆம் திகதி நடைபெற்றது. இதில், ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டொனால்ட் டிரம்ப் வெற்றியடைந்தார்.
இந்நிலையில், மக்கள் அளித்த வாக்குகள் எண்ணிக்கையில் ஹிலாரிக்கு தான் அதிக வாக்குகள் கிடைத்திருந்தன.
அமெரிக்காவின் நடைமுறைப்படி ஜனாதிபதி தேர்வு செய்ய தேர்வாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த தேர்வாளர்கள் தான் ஜனாதிபதியை தேர்வு செய்ய வேண்டும்.
அதன்படி டொனால்ட் டிரம்புக்கு தான் அதிக தேர்வாளர்கள் கிடைத்தனர். எனவே, அவர் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தேர்தலில் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது. ஹிலாரி வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மிக்சிகான், பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் டெனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்க தேர்தலில் ஒவ்வொரு மாகாணங்களிலும் ஒவ்வொரு முறையில் தேர்வு நடத்தப்படுகிறது. வாக்கு சீட்டு முறை, வாக்கு எந்திர முறை, மின்னஞ்சல் ஓட்டுக்கள் அனுப்பும் முறை என பல வகை வாக்கு பதிவு முறை பயன்படுத்தப்பட்டது.
இதில் இந்த 3 மாகாணங்களிலும் கணனி உதவியுடன் செயல்பட்ட வாக்கு எந்திர முறை பயன்படுத்தப்பட்டது. அந்த வாக்கு எந்திரத்தை ஹேக்கிங் முறையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தகவல்களை மாற்றி முறைகேடு செய்திருக்கலாம் என பிரபல கணனி துறை பேராசிரியர் அலெக்ஸ்ஹால்டர்மென் கூறி இருக்கிறார்.
எனவே, இதில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.இதையடுத்து ஹலாரி ஆதரவாளர்கள் 3 மாகாணங்களிலும் மறுபடியும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும். தவறு நடந்ததா? என கண்டுபிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM