கெத்து படத்தில் இடம்பெற்ற சண்டை காட்சிகள் படமாக்கப்பட்ட போது முதலில் தயங்கியதாகவும், பின்னர் நடித்ததாகவும் அப்பட நாயகன் உதயநிதி தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின் ஆதவன், ஒரு கல் ஒரு கண்ணாடி, வணக்கம் சென்னை,  இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா ஆகிய படங்களில் இது வரை நடித்திருக்கிறார். இதில் ஆதவன் மற்றம் வணக்கம் சென்னை ஆகிய படங்களில் கௌரவ வேடங்களில் நடித்திருக்கிறார். 

இவர் தற்போது கெத்து என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த பட அனுபவம் குறித்து அவரிடம் கேட்டபோது, 

இதுவரை ஹீரோவாக மூணு படங்களில் நடித்து இருக்கிறேன். எல்லாமே குடும்பக் கதை, காதல் இருக்கும். ஆனால் பர்ஸ்ட் டைம் சண்டை காட்சிகளுக்கு மாறலாம் என முடிவு பண்ணி நடிக்க ஒத்துக்கொண்ட படம் கெத்து. 

ஆனால் படத்தின் இயக்குநர் திருக்குமரன் சொல்லும் போது, கிளைமேகஸ் சண்டைக் காட்சியை உதயநிதி ஒரே டேக்ல நடிச்சுக் கொடுத்தார். இது தான் உண்மை என்றார்.

தகவல் : சென்னை அலுவலகம்