தனிப்பட்ட நலன் மற்றும் அரசியல் அதிகாரத்தை தக்கவைக்க அரசியலமைப்பு திருத்தம் செய்யப்படுகின்றது - டலஸ்

Published By: Digital Desk 5

22 Oct, 2022 | 11:38 AM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகள் தமது நாட்டின் நலனை மாத்திரம் இலக்காக கொண்டு அரசியலமைப்பை திருத்தம் செய்கின்றன.

ஆனால் இங்கு தனிப்பட்ட நலன் மற்றும் அரசியல் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக அரசியலமைப்பு திருத்தம் செய்யப்படுகின்றன.

மூன்று பிரதான நிபந்தனைகளின் அடிப்படையில் 22 ஆவது திருத்தத்திற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளோம் என சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்ற அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூல வரைபு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

புனர்வாழ்வு பணிய சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் மதிக்கத்தக்கது.பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இச்சட்டமூலத்தை உயர்நீதிமன்றில் சவாலுக்குட்படுத்திய தரப்பினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் அனுதாப பிரேரணை மீதான உரை போல் உள்ளது.22ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்து விசேட அவதானம் செலுத்த வேண்டும். தவறுகளை திருத்திக் கொள்வதற்காக 22ஆவது திருத்தம் குறித்து அவதானம் செலுத்தப்படுகிறது.

1978ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இரண்டாம் குடியரசு யாப்பு இதுவரை 20 முறை திருத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை குறித்து ஆராய வேண்டும். இதற்கான காரணத்தை தெரிந்து கொண்டால் அடுத்த முறை தவறை திருத்தி கொள்ளலாம்.

அரச தலைவர்,அரசியல் கட்சி மற்றும் குடும்பம் ஆகியவற்றை இலக்காக கொண்டு அரசியலமைப்பு திருத்தம் செய்யப்படுகிறது.

முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கு எதிராக முதலாவதாக அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டது.தனது பிற தரப்பினரை இலக்காக கொண்டு பாராளுமன்றில் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

முன்னேற்றமடைந்த நாடுகள் தமது நாட்டின் நலனுக்காவே அரசியலமைப்பை உருவாக்கியுள்ளன.உலக மகா யுத்தத்துக்கு பின்னர் முன்னேற்றமடைந்த ஜப்பான் 5000 சொற்களை கொண்ட அரசியலமைப்பை கொண்டுள்ளது.

இதுவரை ஒருமுறை கூட திருத்தம் செய்யப்படவில்லை.235 வருடகால பழமைவாய்ந்த அரசியலமைப்பை கொண்ட அமெரிக்கா இதுவரை 27 திருத்தங்களை மாத்திரம் அரசியலமைப்பிற்குள் உள்வாங்கியுள்ளது.

ஆனால் இங்கு தனிப்பட்ட நோகக்ங்களை அடிப்படையாக கொண்டு அரசியலமைப்பு திருத்தம் செய்யப்படுகிறது. 1994 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்த அரச தலைவர்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதாக வாக்குறுதி வழங்குகிறார்கள்.ஆனால் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் வழங்கிய வாக்குறுதியை மறந்து விடுகிறார்கள்.

பாராளுமன்றத்தில் இருந்து பறிக்கப்பட்ட அதிகாரம் மீண்டும் பாராளுமன்றத்துக்கு பொறுப்பாக்கப்பட வேண்டும்,சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும், அத்துடன் தனிப்பட்ட இலக்குகளை நோக்கமாக கொண்ட யோசனைகள் இரத்து செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் 22 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக...

2026-04-15 02:19:11
news-image

களுவாஞ்சிக்குடியில் இறந்த கோழி இறைச்சி விற்பனை...

2026-04-14 23:42:34
news-image

கம்பஹாவில் பிரதமர் தலைமையில் சிங்கள, தமிழ்...

2026-04-14 19:57:56
news-image

வென்னப்புவ பகுதியில் 'ஹைடொப் துஷார'வின் பிரதான...

2026-04-14 17:38:09
news-image

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் 54 அதிவேக...

2026-04-14 17:20:25
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம் பெற்ற...

2026-04-14 15:14:44
news-image

வாழைச்சேனையைச் சேர்ந்த குடும்பஸ்தர் நீரில் மூழ்கி...

2026-04-14 15:06:44
news-image

முல்லைத்தீவு தேராவில் பகுதியில் கிணற்றிலிருந்து பெண்ணின்...

2026-04-14 14:56:42
news-image

டித்வா' சூறாவளியினால் சேதமடைந்த, அரசாங்கத்தின் இழப்பீட்டுத்...

2026-04-14 13:34:13
news-image

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல்...

2026-04-14 14:02:42
news-image

தேசிய மின்கட்டமைப்பைப் பாதுகாக்க சூரிய சக்தி...

2026-04-14 12:58:00
news-image

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பராபவ...

2026-04-14 13:22:07