(எம்.வை.எம்.சியாம்)
கோதுமை மாவின் விலை குறைந்துள்ள போதிலும் பாண் மற்றும் ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க முடியாது.
மேலும் அவ்வாறு குறைக்க வேண்டுமானால் நாட்டில் கோதுமை விநியோகிக்கும் இரண்டு பிரதான நிறுவனங்கள் உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலைகள் அனைத்தும் 250 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டும்.
அவ்வாறு விற்பனை செய்யப்படும் போது பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க முடியும் என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்
இது தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது.
இன்று நாட்டில் கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளது ஆனால் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் குறையவில்லை என்று பலரும் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக பேக்கரி உரிமையாளர்கள் பெரும்பாலோனோர் உள்நாட்டின் இரண்டு பிரதான கோதுமை மா விநியோகிக்கும் நிறுவனங்களிடமிருந்தே கோதுமை மாவினை கொள்வனவு செய்கின்றனர்.
இருப்பினும் அந்நிறுவனங்கள் கோதுமை மாவின் விலை குறைக்கவில்லை. தற்போது முன்னரை விட 13 ரூபாவால் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனங்களிடம் ஒரு கிலோ கோதுமை மாவினை பேக்கரி உரிமையாளர்கள் ரூபா 280 முதல் 310 ரூபா கொடுத்து கொள்வனவு செய்கிறார்கள்
கடந்த காலங்களில் நாட்டில் கோதுமை மா தட்டுப்பாடு ஏற்பட்ட போது அரசாங்கம் வெளிநாடுகளிலிருந்து கோதுமை மாவினை இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்தது.
அவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா அதிக விலைக்கு உள்ளூர் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
குறிப்பாக 250 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியுமான கோதுமை மா 420 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாம் இது தொடர்பில் அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்தோம். இருப்பினும் பேக்கரி உரிமையாளர்களுக்கு 280 ரூபா விலையிலயே கோதுமை மாவினை கொள்வனவு செய்வதற்கு முடியுமாகவுள்ளது.
இந்நிலையில் பாண் மற்றும் ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க முடியாது.
அவ்வாறு குறைக்க வேண்டுமானால் கோதுமை விநியோகிக்கும் இரண்டு பிரதான நிறுவனங்கள் உட்பட இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலைகள் 250 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டும். அவ்வாறு விற்பனை செய்யப்படும் போது பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM