ஆனையிறவு உப்பளத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு

Published By: Priyatharshan

24 Nov, 2016 | 01:33 PM
image

( எஸ்.என்.நிபோஜன் )

 
ஆனையிறவு உப்பளத்தைத் தனியார் மயமாக்குவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக வெளியான செய்திகளை அடுத்து, உப்பளத்தின் ஊழியர்களும் தொழிலாளர்களும்  அயற்பிரதேசங்களைச் சேர்ந்த மக்களும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கான ஏற்பாட்டுக் கூட்டம் இயக்கச்சியில் இடம்பெற்றுள்ளது.பரந்தன், குமரபுரம், உமையாள்புரம், தட்டுவன்கொட்டி, இயக்கச்சி, சங்கத்தார்வயல், கோயில்வயல், முகாவில், மாசார், சோறன்பற்று, பேரலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளும் தொழிலாளர்களும் ஊழியர்களும் இதில் கலந்து கொண்டனர்.அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்ட அறிவிப்பில் நட்டத்தில் இயங்கும் கூட்டுத்தாபனங்களை தனியார் மயப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, ஆனையிறவு உப்பளத்தையும் அவ்வாறு தனியார் மயப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவந்துள்ளது. இதனையடுத்தே தமது எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கு இவர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
 
இந்தக் கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் முருகேசு, பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபையின் முன்ளாள் உறுப்பினர் அன்ரன் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு உப்பளத்தைத் தனியார் மயமாக்கப்படுவதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் தொழிலாளர்களுடைய உரிமைக்கான போராட்டத்தைப்பற்றியும் கருத்துரைத்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47