(எம்.வை.எம்.சியாம்)
கொழும்பில் நங்குரமிடப்பட்டுள்ள 100,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெய் அடங்கிய கப்பலுக்கு இதுவரை கட்டணம் செலுத்தப்பட்டவில்லை என்று இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
100,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெய் அடங்கிய கப்பலுக்கு இன்னமும் கட்டணம் செலுத்தப்படவில்லை. 40 நாட்களுக்கும் அதிகமான காலம் குறித்த கப்பல் நாட்டின் கடற்பரப்பில் நங்குரமிடப்பட்டுள்ள நிலையில் சப்புகஸ்கந்த எரிபொருள் நிலையமும் மசகு எண்ணெய் பற்றாக்குறை காரணமாக மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், எவ்வாறாயினும் நாட்டை வந்தடைந்த டீசல் கப்பலுக்கு நேற்று கட்டணம் செலுத்தபட்டுள்ளது. கப்பலில் உள்ள 40 ஆயிரம் மெட்றிக் தொன் டீசலை இறக்கும் பணிகள் நேறைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை விமானங்களுக்கு தேவையான எரிபொருள் ஏற்றி வந்த கப்பலுக்கும் கட்டணங்கள் செலுத்தபட்டுள்ளதுடன் எரிபொருளை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிலக்கரியை ஏற்றிய கப்பல் எதிர்வரும் 25ஆம் திகதி நாட்டை வந்தடையும் என்று இலங்கை நிலக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் ஒப்பந்தம் கைச்சாத்திட்ட நிறுவனம் ஒன்றிலிருந்தே நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதாக இலங்கை நிலக்கரி சங்கத்தின் முகாமையாளர நாவல் ஹேவகே குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு அமைவாக இடையூறு இன்றி நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்ல முடியும். மேலும் கையிருப்பில் உள்ள நிலக்கரியை தொகை எதிர்வரும் 30 ஆம் திகதி மாத்திரமே போதுமானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கைத்திடப்பட்ட நிறுவனத்திடமிருந்து எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் நிலக்கரி கப்பல்களை இறக்குமதி செயய திட்டமிட்டப்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM