இரு தடவைகள் உலக சம்பியனான மேற்கிந்தியத் தீவுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த அயர்லாந்து சுப்பர் 12 க்கு தகுதி

By Digital Desk 5

21 Oct, 2022 | 01:28 PM
image

(நெவில் அன்தனி)

இரண்டு தடவைகள் உலக சம்பியனான மேற்கிந்தியத் தீவுகளை அதிர்ச்சி தோல்வி அடையச் செய்த அயர்லாந்து, ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டின் சுப்பர் 12 சுற்றில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டது..

ஹோர்பார்ட், பெலேரிவ் ஓவல் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற பி குழுவுக்கான முதலாம் சுற்று போட்டியில் அயர்லாந்திடம் 9 விக்கெட்களால் தோல்வி அடைந்த மேற்கிந்தியத் தீவுகள் ஏமாற்றத்துடன் நாடு திரும்பவுள்ளது.

அப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளினால் நிர்ணயிக்கப்பட்ட 147 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய   அயர்லர்நது 17.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 150 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.

Gareth Delany bowled a top spell,  Ireland vs West Indies, ICC Men's T20 World Cup, Hobart, October 21, 2022

கெரத் டிலானியின் துல்லியமான பந்துவீச்சு, போல் ஸ்டேர்லிங் குவித்த அரைச் சதம், அணித் தலைவர் அண்டி பெல்பேர்னி, லோர்க்கன் டக்கர் ஆகியோரின் திறமையான துடுப்பாட்டங்கள் என்பன அயர்லாந்தின் வெற்றியை சுலபமாக்கின.

சிரேஷ்ட வீரர் போல் ஸ்டேர்லிங்கும் அண்டி பெல்பேர்னியும் 45 பந்துகளில் 71 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்து அழுத்தத்தை குறைத்தனர்.

பெல்பேர்னி 23 பந்துகளில் தலா 3 சிக்ஸ்களையும் 3 பவுண்டறிகளையும் அடித்து 37 ஓட்டங்ளைப் பெற்று ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து போல் ஸ்டேர்லிங், லோர்க்கன் டக்கர் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 77 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.

Paul Stirling made a bright start,  Ireland vs West Indies, ICC Men's T20 World Cup, Hobart, October 21, 2022

போல் ஸ்டேர்லிங் 48 பந்துகளில் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் அடங்கலாக 66 ஓட்டங்களுடனும் டக்கர் 35 பந்துகளில் ஒரு பவுண்டறி, 3 சிக்ஸ்கள் உட்பட 47 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றது.

மேற்கிந்தியத் தீவுகளின் ஆரம்பம் சிறப்பாக அமையாதபோதிலும் ப்றெண்டன் கிங் பெற்ற ஆட்டமிழக்காத  அரைச் சதம் சுமாரான மொத்த எண்ணிக்கையைப் பெற உதவியது.

Brandon King pulls the ball away,  Ireland vs West Indies, ICC Men's T20 World Cup, Hobart, October 21, 2022

கய்ல் மெயர்ஸ் (1), ஜோன்சன் சார்ள்ஸ் (24) ஆகிய இருவரும் ஆட்டமிழக்க, 5ஆவது ஓவரில் மேற்கிந்தியத் தீவுகளின் மொத்த எண்ணிக்கை 27 ஓட்டங்களாக இருந்தது.

இந் நிலையில் எவின் லூயிஸ் (13), ப்றெண்டன் கிங் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 44 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர்.

எவின் லூயிஸைத்  தொடர்ந்து நிக்கலஸ் பூரண் (13), ரோவ்மன் பவல் (6) ஆகியோரும் ஆட்டமிழக்க மேற்கிந்தியத் தீவுகள் நெருக்கடியை எதிர்கொண்டது.

Barry McCarthy celebrates after dismissing Kyle Mayers,  Ireland vs West Indies, ICC Men's T20 World Cup, Hobart, October 21, 2022

எனினும் ப்றெண்டன் கிங் 48 பந்துகளில் 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 62 ஓட்டங்களையும் ஓடியன் ஸ்மித் 19 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்று பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து சுமாரான மொத்த எண்ணிக்கையைப் பெற உதவினர்.

பந்துவீச்சில் கெரத் டிலானி 4 ஓவர்களில் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெடகளை வீழ்த்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மிச்செல்களின் அபார ஆட்டங்கள் நியூஸிலாந்தின் வெற்றிக்கு...

2023-01-28 11:53:55
news-image

2022ஆம் ஆண்டின் சிறந்த விமானப்படை விளையாட்டு...

2023-01-28 11:07:43
news-image

அவுஸ்திரேலியாவை வெற்றிகொண்ட இங்கிலாந்து இறுதிப் போட்டியில்...

2023-01-27 21:58:26
news-image

மகளிர் இருபது 20 உலகக் கிண்ணத்தில்...

2023-01-27 20:31:41
news-image

முதலாவது அரை இறுதியில் இந்தியா -...

2023-01-27 13:26:33
news-image

வருடத்தின் அதிசிறந்த ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட்...

2023-01-27 16:59:41
news-image

வருடத்தின் ஐசிசி வளர்ந்துவரும் அதிசிறந்த வீரர்...

2023-01-26 22:07:16
news-image

2022ஆம் வருடத்தின் அதிசிறந்த ஐசிசி கிரிக்கெட்...

2023-01-26 22:08:08
news-image

பாபர் அஸாமுக்கு வருடத்தின் அதிசிறந்த ஐசிசி...

2023-01-26 17:32:25
news-image

வருடத்தின் அதிசிறந்த ஐ.சி.சி. கிரிக்கெட் வீரர்...

2023-01-26 15:37:19
news-image

ஆசிய விளையாட்டு விழாவில் ரஷ்யர்கள் பங்குபற்றலாம்...

2023-01-26 15:41:21
news-image

வருடத்தின் அதிசிறந்த ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்...

2023-01-26 14:36:35