ஒருகொடவத்தை கொள்கலன் தளத்திலிருந்து 200 கோடி பெறுமதியான கொக்கைன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தேடுதல் வேட்டையின் போது 200 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீட்கப்பட்ட கொக்கைன் போதைப்பொருள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.