இன்று வாக்கெடுப்பு ! பிளவுபடுமா பொதுஜன பெரமுன ?

Published By: Digital Desk 5

21 Oct, 2022 | 09:54 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் இன்று வெள்ளிக்கிழமை வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ள நிலையில் ஆளும் தரப்பான பொதுஜன பெரமுன  கட்சிக்குள் பிளவுகள் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. அதனால் இதனை தடுப்பதற்கு கட்சிக்குள் ஒரு பிரிவினர் கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

22ஆவது அரசியலமைப்பு  திருத்தச் சட்டமூலம் கடந்த பாராளுமன்ற அமர்வின்போது இரு நாள் விவாதத்துக்கு எடுக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட  பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தபோதும் ஆளும் தரப்பான பொதுஜன பெரமுன  கட்சிக்குள்  அக்கட்சியின் பொதுச் செயலரான சாகர காரியவசம் தலைமையிலான பசில் ராஜபக்ஷ் ஆதரவு  எம்.பி.க்கள்  இந்த சட்ட மூலத்தின் சில பிரிவுகளுக்கு கடுமையாக எதிர்த்ததுடன் வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிப்போம் எனவும் அச்சுறுத்தியதால் 22ஆவது அரசியலமைப்பு  திருத்தச் சட்டமூலம் கடந்த பாராளுமன்ற அமர்வில் விவாதத்திற்கு எடுக்கப்படாது ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இவ்வாரத்துக்கான பாராளுமன்ற அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை கூடிய நிலையில் நேற்று வியாழக்கிழமையும் இன்று வெள்ளிக்கிழமையும் 22ஆவது அரசியலமைப்பு  திருத்தச் சட்டமூலம் விவாதத்திற்கு எடுக்கப்பட்டு வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது. இதற்கான விவாதம் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமான நிலையில் நீதி அமைச்சர் விஜே தாச ராஜபக்ஷ் இந்த திருத்த சட்டமூலத்தை நேற்று சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார். 

இவ்விவாதத்தில் அரச தரப்பில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர,நிமல் சிறிபால டிசில்வா, இராஜாங்க அமைச்சர் சாமர  சம்பத் தசநாயக்க, எம்.பி.க்களான மஹிந்தானந்த அளுத்கமகே . பிரேம் லால் தொலவத்த ஆகியோர் சட்டமூலத்துக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றிய நிலையில் பொதுஜன பெரமுன  கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. தலைமையிலான பசில் ராஜபக்ஷ் ஆதரவு  எம்.பி.க்கள் சபையில் இருக்கவில்லை. 

அத்துடன் 22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை எதிர்த்தது வாக்களிக்கப்பபோவதாக  பொதுஜன பெரமுன    கட்சியின் பொதுச் செயலரான சாகர காரியவசம் எம்.பி.ஏற்கனவே அறிவித்துள்ளார்.

எனினும் பிரதான எதிர்கட்சியான சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, எதிர்க்கட்சி தரப்பில் சுயாதீன எதிர்கட்சிகளாக செயற்படும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, பொதுஜன பெரமுனவை சேர்ந்த பேராசிரியர் பீரிஸ் தலைமையிலான அணி ,வாசுதேவ நாணயக்காரவின் கட்சி,விக்னேஸ்வரன் எம்.பி.யின் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி,ஆகியன 22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ஆதரிக்கப்போவதாக அறிவித்துள்ள நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு, ஜே .வி.பி., தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய காட்சிகள் இன்று வெள்ளிக்கிழமை தமது நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளன.

எனவே 22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு எதிர்கட்சிகளிடையில் ஆதரவு பெருகிவரும் நிலையில் அரச தரப்பான பொதுஜன பெரமுன கட்சிக்குள் முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன .   பொதுஜன பெரமுன    கட்சியின் பொதுச் செயலரான சாகர காரியவசம் எம்.பி.தலைமையிலான பசில் ராஜபக்ச ஆதரவு எம்.பி.க்களின் ஆதரவைப்பெற  முயற்சிகள்  முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தமது    எதிர்ப்பு நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதால் 22ஆம் திருத்தத்துக்கு இன்று நடைபெறவுள்ள வாக்கெடுப்பினால் அரச தரப்பான பொதுஜன பெரமுன பிளவடையும் நிலை ஏற்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழைய பிணக்குகளை மறந்து ஒற்றுமையுடன் புதிய...

2026-04-12 15:15:38
news-image

உடலில் மறைத்து கொக்கைன் கடத்தல்: வெளிநாட்டுப்...

2026-04-12 15:25:07
news-image

கடல் அட்டை பிடித்த 06 பேர்...

2026-04-12 15:03:40
news-image

இயற்கை அழகுசாதனப் பொருட்கள் என கூறி...

2026-04-12 14:59:21
news-image

மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம்...

2026-04-12 14:50:41
news-image

மின்சார சபை ஊழியர்களுக்கு உரிய இழப்பீட்டுத்...

2026-04-12 14:32:14
news-image

நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள்! - தையிட்டி...

2026-04-12 13:19:33
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் உள்ள...

2026-04-12 13:18:45
news-image

“முழு நாடுமே ஒன்றாக” வேலைத்திட்டம் :...

2026-04-12 13:15:55
news-image

மட்டக்களப்பில் களைகட்டும் சித்திரை புத்தாண்டு: உற்சாகத்தில்...

2026-04-12 12:42:32
news-image

சட்டவிரோத பஸ் போக்குவரத்து: கொழும்பில் 07...

2026-04-12 12:18:38
news-image

புத்தளத்தில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2026-04-12 11:42:41