நிறைவேற்று அதிகாரம் மட்டுப்படுத்தும் வகையில் 22ஆவது திருத்த வரைபு சமர்ப்பிக்கப்படவில்லை - சந்திம வீரகொடி

Published By: Digital Desk 3

21 Oct, 2022 | 09:16 AM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் வகையில் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூல வரைபு சமர்ப்பிக்கப்படவில்லை. அரசியலமைப்பு திருத்தம் என குறிப்பிட்டுக் கொண்டு ஒருசில விடயங்கள் மாத்திரமே காலம் காலமாக திருத்தப்படுகிறது என சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூல வரைபு மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பாராளுமன்றம்,பாராளுமன்ற முறைமை மற்றும் அரசியல் கட்டமைப்பு ஆகியவற்றை நாட்டு மக்கள் முழுமையாக வெறுக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. நாட்டின் அபிவிருத்தி,ஜனநாயகத்தை உறுதிப்படுத்தல் மற்றும் ஊழலற்ற அரசாங்கத்தை முன்னெடுத்தல் ஆகியவற்றை இலக்காக கொண்டு நாட்டு மக்கள் தமக்கான பிரதிநிகளை தெரிவு செய்கிறார்கள்.

இரண்டாம் குடியரசு திருத்தம் இதுவரை 20 முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முழுமையாக இல்லாதொழிப்பதாக தேர்தல் காலங்களில் நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கப்படுகிறது.

ஆனால் அரசியலமைப்பு திருத்தம் என்ற பெயரில் ஒருசில விடயங்கள் மாத்திரம் திருத்தம் செய்யப்படுகிறது.இதுவே காலம் காலமாக இடம்பெறுகிறது,நாட்டு மக்களும் ஏமாற்றப்படுகிறார்கள்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கும்,பலவீனமான அரசாங்கத்துக்கும் எதிராக நாட்டு மக்கள் கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்னர் வீதிக்கிறங்கிய போது அரசாங்கம் 20ஆவது திருத்தத்தை நீக்கி,அரசியலமைப்பை திருத்தம் செய்ய அவதானம் செலுத்தியது.

அக்காலப்பகுதியில் பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்பட்ட தற்போதைய நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபாக்ஷ உண்மை நோக்கத்துடன் அரசியலமைப்பு திருத்தத்துக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

ஆனால் தற்போது அவரால் கூட உண்மை தன்மையுடன்,மக்கள் எதிர்பார்ப்புக்கு அமைய அரசியலமைப்பு திருத்தத்தை உருவாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பதே உண்மை.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் வகையில் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22ஆவது திருத்தச் சட்டமூல வரைபில் எவ்வித ஏற்பாடுகளும் உள்வாங்கப்படவில்லை.

அரசியலமைப்பு திருத்தம் ஊடாக எப்பிரசசினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டது என்பது கேள்விக்குறியானதே என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33