''காமினி திசாநாயக்க ஒரு இனவாதி'' - சிறிதன் எம்.பி.க்கும் மயந்தவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம்

By Digital Desk 5

21 Oct, 2022 | 09:17 AM
image

(இராஜதுரை ஹஷான்,எம்,ஆர்.எம்.வசீம்)

முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயக்க ஒரு இனவாதி என்று  பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்ததால் அவருக்கும் சபைக்கு தலைமை தாங்கிய காமினி திஸாநாயக்கவின் மகனும் ஐக்கிய மக்கள் சக்ததியின் உறுப்பினருமான மயந்த திஸாநாயக்கவுக்குமிடையில் வாக்குவாதம் இடம்பெற்றது.

சபைக்கு தலைமை தாங்கும் ஆசனத்தில் அமர்ந்துக் கொண்டு நீங்களும் இனவாதம் பேசுகின்றீர்கள்..அந்த ஆசனத்தில் அமர்ந்துக் கொண்டு இவ்வாறு உங்களால் பேச முடியாது என பாராளுமன்ற உறுப்பினi; சிறிதரன் ,சபைக்கு தலைமை தாங்கிய மயந்த  திஸாநாயக்கவை நோக்கி காட்டமாக குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை 22 ஆவது அரசியலமைப்பு திறத்தை சட்ட மூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது.

இந்த விவாதத்தில் உரையாற்றிய தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்  எஸ்.ஸ்ரீதரன் இலங்கை அரசியல்வாதிகளின் இனவாதம் மதவாதம் தொடர்பில் காரசாரமாக பேசுகையில் சிறில்மத்யூ ஒரு இனவாதி,லலித் அத்துலத் முதலி ஒருஇனவாதி,பிரேமதாச ஒரு இனவாதி  மற்றும் காமினி திசாநாயக்க ஒரு இனவாதி . இவர்கள் இனவாத வெறிபிடித்தவர்கள் எனக்கூறினார்.

இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய  காமினி திசாநாயக்கவின் மகனும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினi; மயந்த திசாநாயக்க குறுக்கிட்டு எனது தந்தையான காமினி திசாநாயக்க இனவாதி அல்ல என்றார்.

காமினி திசாநாயக்க இனவாத வெறிபிடித்தவர் என்பதனால்தான் யாழ் நூலகத்தை எரித்தார். இதனை உங்களால் மறுக்க முடியுமா என ஸ்ரீதரன்  பதில் கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து உங்களுக்கான உரையாற்றும் நேரம் முடிவடைந்து விட்டது பேச்சை நிறுத்துங்கள் என மயந்த திசாநாயக்க  கூறினார். எனினும் ஸ்ரீதரன்  தொடர்ந்தும் பேசினார். இதன்போது உறுப்பினரே பொய் பேச வேண்டாம். தவறான கருத்தைக்கூற வேண்டாம் .எனது தந்தை காமினி திசாநாயக்க இனவாதியல்ல என மீண்டும் மயந்த திசாநாயக்க .கூறினார்.

இல்லை உங்கள் தந்தை ஒரு  இனவாதிதான் என ஸ்ரீதரன் அழுத்தமாக குறிப்பிட்டார், உங்கள் பேச்சை  நிறுத்துங்கள் நேரம் முடிவடைந்து விட்டது என மீண்டும் மீண்டும் மயந்த திசாநாயக்க  கூறிக்கொண்டிருந்தார்.

சபைக்கு தலைமைதாங்கும் ஆசனத்தில் இருந்து கொண்டு நீங்களும் தந்தையைப்போல் இனவாதமாகவே செயற்படுகின்றீர்கள். எனது நேரத்தை நீங்களே எடுத்தீர்கள். அதனால் எனக்கு இன்னும் இரு நிமிடங்கள் வேண்டும் எனக்கூறி தனது பேச்சை ஸ்ரீதரன் தொடர்ந்து பின்னர் முடித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தாய்ப் பால் புரக்கேறி 30...

2023-01-28 12:21:10
news-image

மட்டு கரடியனாற்றில் 16 மாடுகள் கடத்தல்...

2023-01-28 12:13:02
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள வசந்த...

2023-01-28 12:06:00
news-image

தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி சுதந்திரதினத்தன்று யாழிலிருந்து...

2023-01-28 11:38:21
news-image

3 இந்திய மீன்பிடிப் படகுகள் அரசுடமையாக்கப்பட்டன

2023-01-28 11:21:37
news-image

வாழைச்சேனையில் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக கண்டன...

2023-01-28 11:38:57
news-image

பாதுகாப்பு, செழிப்பினை தொடர்ந்தும் முன்னேற்ற நாங்கள்...

2023-01-28 11:07:07
news-image

மீற்றர் வட்டி விவகாரம் ; மேலும்...

2023-01-28 11:00:53
news-image

தேர்தல் முடியும்வரை புதிய ஆணைக்குழு அமைப்பதை...

2023-01-28 10:49:46
news-image

சகோதரனுக்காக நாட்டின் அரசியலமைப்பை மாற்றிய உலகில்...

2023-01-28 10:55:50
news-image

இக்கட்டான நிலைமையில் ஒத்துழைப்பு வழங்கிய இந்திய...

2023-01-28 10:26:02
news-image

யாழில் மூன்று தேர்தல் வன்முறைச் சம்பவங்கள்...

2023-01-28 09:49:28