சாரதிகளுக்கெதிராக விதிக்கப்படும் தண்டப்பணத்திலிருந்து அரசாங்கம் வருமானம் பெறவேண்டிய தேவையில்லை என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

வீதி ஒழுங்கினை மீறும் சாரதிகளுக்கெதிராக விதிக்கப்படவுள்ள 7 விதமான குற்றங்களுக்கான குறைந்தபட்ச தண்டப்பணமான 25 ஆயிரம் ரூபா தொடர்பில்  எவ்வித மாற்றங்களும் இடம்பெறாது.

எவ்வாறாயினும் குறித்த 7 குற்றசாட்டுகளை தவிர்த்து ஏனைய குற்றங்களுக்கான தண்டப்பணம் தொடர்பில் மீள்பரிசீலனை செய்யப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.