சமந்தா நடிக்கும் 'யசோதா' படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

By Nanthini

20 Oct, 2022 | 05:03 PM
image

டிகை சமந்தா கதாநாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'யசோதா' படத்தின் வெளியீட்டுத் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர்களான ஹரி, ஹரிஷ் இயக்கத்தில் தயாரான புதிய திரைப்படம் 'யசோதா'. இதில் சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் நடிகர்களான உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், நடிகை வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு மணி ஷர்மா இசையமைத்திருக்கிறார். 

அறிவியல் புனைவு கதையாக தயாராகியுள்ள இந்த படத்தை ஸ்ரீதேவி மூவிஸ் என்ற பட நிறுவனம் சார்பில் சிவலிங்கா கிருஷ்ண பிரசாத் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று இறுதிக்கட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. 

தொடர்ந்து தற்போது இந்த படம் வெளியாகும் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 11ஆம் திகதி இந்த திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

வலைத்தளத் தொடர், திரைப்படம் என இரண்டிலும் வெற்றி வாகை சூடிவரும் நடிகை சமந்தாவின் நடிப்பில், 'யசோதா' வெளியாக இருப்பதால், அவரது ரசிகர்கள் இந்த படத்தை வெற்றிப்படமாக்க ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்