நகைச்சுவையில் புது ட்ரெண்ட்டை உருவாக்குமா 'பிரின்ஸ்'?

Published By: Nanthini

20 Oct, 2022 | 12:20 PM
image

தீபாவளி திருநாளை முன்னிட்டு ஒக்டோபர் 21ஆம் திகதியன்று வெளியாகும் சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' திரைப்படம், நகைச்சுவைப் படங்களில் புதிய பாணியை உருவாக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கி, தீபாவளி விருந்தாக வெளியாகவுள்ள படம் 'பிரின்ஸ்'. இதில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக உக்ரேனிய நாட்டு நடிகை மரியா ரியாபோஷப்கா நடித்திருக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், பிரேம்ஜி அமரன், 'பிராங் ஸ்டார்' ராகுல், 'ஃபைனலி' பாரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

தீபாவளிக்கு வெளியாகும் இந்த படத்தினை ரசிகர்களிடத்தில் அறிமுகப்படுத்தும் வகையில் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது பேசிய சிவகார்த்திகேயன், ''பிரின்ஸ் திரைப்படம் ஒரு எளிமையான கதை. இந்திய பையன் ஒருவன், பிரிட்டிஷ் பெண்ணை காதலிக்கிறான்.

ஆனால், இந்த கதைக்குள் இயக்குநர் நிகழ்த்தியிருக்கும் நகைச்சுவை கலந்த மாயாஜால விடயங்கள் தான் புதிது. நகைச்சுவையைப் பொருத்தவரை ஒருவர் பேச்சுக்கு மறுபேச்சு பேசுவது ஒரு பாணி என்றால், இந்தப் படத்தில் ஒருவர் பேசும்போது அதற்கு சம்பந்தமே இல்லாத வேறொரு பதிலை சொல்வார்கள்.

கதையை அற்புதமாக நகர்த்திச் செல்லும் இந்த படம் மிகவும் ஜாலியான திரைப்படம். அதனால் ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும்'' என்றார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இருக்கும். ஆனால், இந்த 'பிரின்ஸ்' படம், நாம் எதிர்பாக்காத வகையில் வேறு வகையினதான கொமடி படமாக தயாராகி இருக்கிறது. 

'பாஸ் என்கிற பாஸ்கரன்', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' என நகைச்சுவைக்காக தனி முத்திரை பதித்த படங்களின் வரிசையில் 'பிரின்ஸ்' திரைப்படமும் புதிய ட்ரெண்டை ஏற்படுத்தும் படைப்பாக இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்தப் படம், தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் வெளியாகிறது. ஏறத்தாழ 1000 திரைகளில் திரையிடப்படுகிறது என திரையுலக வணிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35