(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
வைத்தியசாலைகளில் நிலவும் மருந்துகள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, அனுராதபுரம் மாவட்ட எம்.பி., இசாக் ரஹ்மான் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக இஷாக் ரஹ்மான் எம்.பி.,
அனுராதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பிரதேச வைத்தியசாலைகளிலும் மருந்து தட்டுப்பாடு நிலவுகின்றது. அதனால் அனைத்து நோயாளிகளும் அனுராதபுரம் மாவட்ட வைத்தியசாலைக்கு படையெடுப்பதால், அங்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
பிரதேச வைத்தியசாலைகளுக்கும் முறையாக மருந்து பகிர்ந்தளிப்பு இடம்பெறுவதில்லை. அதனால், இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு எடுக்கும் நடவடிக்கை என்ன என கேட்டார்.
அதற்கு அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில்,
வைத்தியசாலைகளில் நிலவும் மருந்துகள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அனுராதபுரம் மாவட்டத்தில் மட்டுமன்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த பிரச்சினை இருந்து வருகின்றது. அது தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்தப்படும்.
இக்காலங்களில் மருந்து விநியோக நடவடிக்கைகளில் சில சிக்கல்கள் காணப்படுகின்றன. மேலும், சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அதனால் இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM