குறைந்தபட்ச தண்டப்பணமான 25 ஆயிரம் ரூபா தொடர்பில் ஜனாதிபதி மறுபரிசீலனை செய்ய வேண்டுமென அகில இலங்கை மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

வேகம் மற்றும் இடது கை பக்கமாக வாகனங்களை முந்துதல் போன்ற குற்ஙங்களுக்கு 25 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடுவது நடைமுறைக்கு சாத்தியமில்லையெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வாகன சாரதிகளுக்கு எதிராக சுமத்தப்படும்  மது போதையுடன் வாகனம் செலுத்தல் உட்பட 7 வகையான குற்றச்சாட்டுகளுக்கு ஆகக்குறைந்த தண்டப்பணமாக 25 ஆயிரம் அறவிடுவதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.