கிளிநொச்சியில் உணவுப் பற்றாக்குறையால் 9971 குடும்பங்கள், 784 கர்ப்பிணிகள் பாதிப்பு - மாவட்ட அரச அதிபர்

By T. Saranya

20 Oct, 2022 | 10:51 AM
image

கிளிநொச்சி மாவட்டத்தில் 9971 குடும்பங்கள் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 784 கர்ப்பிணிகளும், 576 ஐந்து வயதிக்குட்பட்ட சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக  மாவட்ட அரச அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிராமிய பொருளாதார புத்தெழுச்சி  மையங்களை வலுவூட்டும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழான மாவட்ட மட்ட கலந்துரையாடல்  மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு  கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட ரீதியில்  உணவு உற்பத்திக்கான பல்வேறு நிகழ்ச்சி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக உணவு பற்றாக்குறை அல்லது உணவு பாதுகாப்பின்றி  இருக்கின்ற சூழ்நிலைகளை இனங்கண்டு அடையாளப்படுத்தி  அவ்விதமான சூழல்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு  சம்பந்தப்பட்ட துறையினருடன்  கலந்துரையாடப்பட்டுள்ளது

பிரதேச செயலக ரீதியாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 9 ஆயிரத்து 971 குடும்பங்கள் உணவு பற்றாக்குறையினால்  பாதிக்கப்பட்டுள்ள  அதே நேரம் 576 வரையான ஐந்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

இதேவேளை வறுமையின் காரணமாக  784  கர்ப்பிணித் தாய்மார்களும்  பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என தெரிவித்த அரசாங்க அதிபர்

பாதிப்புற்றுள்ளவர்களுக்கான தீர்வினை வழங்குகின்ற வகையில் மாவட்ட மட்ட குழுவுக்கும் சம்மந்தப்பட்ட கிராமிய குழுவுக்கும் பொறுப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விடயங்களில் இருந்து மக்களை பாதுகாக்க அனைவருக்கும் உணவு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும். 

அதற்கமைய குறிப்பாக வீட்டுத் தோட்டங்களை உருவாக்குதல் உணவு உற்பத்திகளை ஊக்கப்படுத்துதல் உணவு உற்பத்தியாளர்களிடமிருந்து உணவைப்பெற்று பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வழங்குதல்  போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலில் மாவட்ட செயலக அதிகாரிகள்,பிரதேசசெயலாளர்கள்,சம்மந்தப்பட்ட துறை சார் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் அரச  சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சிமன்ற சபைகளை கலைக்கும் அதிகாரம் எமக்கு...

2023-02-01 18:47:56
news-image

13 ஐ அமுல்படுத்தினால் தமிழ் -...

2023-02-01 18:44:58
news-image

சிங்கள- தமிழ் இனக்கலவரம் மீண்டும் தோற்றம்...

2023-02-01 18:45:41
news-image

இலங்கை வழமைக்கு திரும்ப அமெரிக்கா தொடர்ந்தும்...

2023-02-01 18:43:08
news-image

மக்களை வஞ்சிக்காத சபையை நாம் அமைப்போம்...

2023-02-01 18:42:09
news-image

யானையின் வாலைப் பிடித்து சொர்க்கம் செல்ல...

2023-02-01 18:41:11
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தை சீர்திருத்தும் நடவடிக்கைகளை தொடர்ந்து...

2023-02-01 17:33:03
news-image

இலங்கை ஜனநாயகம் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கான தருணம்...

2023-02-01 17:03:46
news-image

ஊடகவியலாளர் நிபோஜனின் உடலம் இறுதி அஞ்சலியுடன்...

2023-02-01 18:38:05
news-image

சமூக அமைதியின்மை நிலவிய காலங்களில் அரசாங்கம்...

2023-02-01 16:44:53
news-image

எல்பிட்டிய பிரதேச வீடு ஒன்றிலிருந்து இரு...

2023-02-01 16:39:04
news-image

வைத்தியசாலையில் சிகிச்சைபெறும் மனைவியை பார்க்க  தாயுடன்...

2023-02-01 16:14:37