ஜோர்ஜ் கீற் ஸ்தாபகத்துடன் இணைகிறது MMCA (இலங்கை)

Published By: Nanthini

20 Oct, 2022 | 10:37 AM
image

வீன மற்றும் சமகால கலைக்கான அருங்காட்சியகமானது (MMCA இலங்கை)  ஜோர்ஜ் கீற்றின் படைப்புகளை ஆவணப்படுத்தி, இலங்கை ஓவியரின் தெரிவுசெய்யப்பட்ட ஓவியங்களூடாக விழிப்புணர்வினை ஏற்படுத்துகிறது.

இந்நவீன மற்றும் சமகால கலைக்கான அருங்காட்சியகமானது இலங்கை மக்களுக்கு நவீன, சமகால கலைகளை பற்றி தெரியப்படுத்துவதற்காக பல்வேறு வழங்குநர்கள் மற்றும் தனியார் சேகரிப்பாளர்களுடன் இணைந்து கண்காட்சிகளை உருவாக்குகின்றது. 

இந்நிலையில் 2021ஆம் ஆண்டு ஜோன் கீல்ஸ் நிறுவனத்தின் பல்வேறு அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஜோர்ஜ் கீற் ஸ்தாபக கூட்டமைப்பு அருங்காட்சியகத்துக்கு கையாள அனுமதி வழங்கப்பட்டது. 

தலைமை எடுத்தாளுநர் ஷர்மினி பெரேரா மற்றும் எடுத்தாளுநர் சந்தேவ் ஹண்டி குறித்த ஆய்வுக்காக இவ்வலுவலகங்களில் உள்ள கீற்றின் நான்கு ஓவியங்களை பார்வையிட்ட போதே MMCA (இலங்கை)யின் இரண்டாம் கண்காட்சியின் சந்திப்புகளுக்கான கரு உருவானது.

இக்கூட்டணியை பற்றி ஷர்மினி பெரேரா கூறியபோது, "ஜோர்ஜ் கீற்றின் ஓவியங்களை GKFஇன் தலைவரான மைக் அன்டோநியாஸ் அவர்கள் எமக்கு சுற்றிக் காண்பித்தது, எமக்கு கிடைத்த மிகப்பெரும் வாய்ப்பாகும். ஏனெனில், கீற்றின் படைப்புகளை ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் பார்வையிட வாய்ப்பிருக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.

"பெரேரா மற்றும் ஹண்டி ஆகியோர் 2022 பெப்ரவரி மாதம் திறந்துவைக்கப்பட்ட 'சந்திப்புகள்' கண்காட்சியில் கீற்றின் படைப்புகளை உள்ளடக்கி, மக்களுக்கு இலவசமாக அவற்றை பார்வையிடும் வாய்ப்பினை உருவாக்கினர்.

GKFஆனது ஓவியர் வாழ்ந்த காலப்பகுதியான 1988ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. இதன் முக்கிய குறிக்கோள் வளர்ந்துவரும் இலங்கை ஓவியர்களின் கலையை ஊக்குவித்து வெளியுலகுக்கு காண்பிப்பதாகும். 

MMCA (இலங்கை) போன்ற நிறுவனத்துடன் பணியாற்றுவதில் நாம் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். ஏனெனில் இது, இலங்கை ஓவியர்களின் படைப்பை ஆவணப்படுத்துவதுடன், அவற்றை வெளியுலகுக்கு காட்சிப்படுத்துகின்றது" என ஜோர்ஜ் கீற் ஸ்தாபகத்தின் தலைவர் மைக் அன்டோநியாஸ் கூறுகிறார்.

காட்சியிலுள்ள படைப்புகளை பற்றி ஹண்டி கூறியதாவது, 

இலங்கையில் ஜோர்ஜ் கீற் பிரபலமானவர். எனினும், பதிப்பகங்களை தவிர்த்து, அவரின் படைப்புகளை பற்றி அறிந்துகொள்ள வழியில்லாததால் பொது மக்களுக்கு அவரின் ஓவியங்களை பற்றி மிகக் குறைந்தளவே தெரிந்துள்ளது" என்றார்.  

'சந்திப்புகள்' கண்காட்சியூடாக தெரிவுசெய்யப்பட்ட கீற்றின் ஓவியங்களான ‘The Friends’' (1982), ‘'Pounding Paddy’' (1952) ஆகியவை பெப்ரவரி 11ஆம் திகதி முதல் மே 22ஆம் திகதி வரையான ‘சந்திப்புகள்’ கண்காட்சியின் முதலாம் சுழற்சியின்போது காட்சிப்படுத்தப்பட்டன.

அத்துடன், ‘The Offering' (1949), ‘Kandyan Bride'’ (1951) ‘ஆகிய ஓவியங்கள் 'சந்திப்புகள்’ கண்காட்சியின் 3ஆம் சுழற்சியில் 2022 நவம்பர் 13ஆம் திகதி முதல் 2023 மார்ச் 19ஆம் திகதி வரை காட்சிப்படுத்தப்படும்.

"இந்த நான்கு ஓவியங்களும் ஷர்மினிக்கும் எனக்கும் 'சந்திப்புகள்' கண்காட்சியின் தொடக்கப்புள்ளியை வழங்கியது. நாம் ஏனைய ஓவியர்களுடைய படைப்புகளுடன் உரையாடல் அல்லது சந்திப்புகளை உருவாக்கியுள்ளோம்" என கூறிய சந்தேவ் மேலும் கூறியதாவது, 

"MMCA (இலங்கை) வெவ்வேறு தலைமுறையை சேர்ந்த ஓவியர்களின் ஒத்த கருத்துள்ள படைப்புகளை ஒன்றுக்கொன்று நேர்மாறாக காட்சிப்படுத்தியுள்ளனர்.

GKF முகங்கொடுக்கும் பாரிய சவால் இப்படைப்புகளை பாதுகாக்க தேவைப்படும் செலவாகும். இச்செலவோடு ஓவியங்கள் மற்றும் வரைபடங்களை பாதுகாப்பதும் உள்ளடங்கும்.  

'சந்திப்புகள்' கண்காட்சியூடாக கீற்றின் நான்கு ஓவியங்கள் வெற்றிகரமாக உட்சேர்க்கப்பட்டுள்ளது" என்கிறார்.   

இதேபோன்று, கலைப் பாதுகாப்பை பற்றி ConsArtஐ சேர்ந்த உதய ஹெவவாசம் கூறியதாவது, 

"மிகப்பெரிய பாதிப்பு மரச் சட்டங்களுக்கேயாகும். ஏனெனில், அவை கறையானால் முழுவதுமாக சேதப்படுத்தப்பட்டிருந்தது. ஆகையால், அனைத்து சட்டங்களையும் மாற்றியமைப்பதை  தவிர வேறு வழியில்லை” என்றார்.

இந்த ஓவியங்களை பாதுகாக்கும் பணி இடம்பெற்றபோது ஓவியங்களின் பின்னால் கடந்த கால கண்காட்சிகள், தலைப்புகள் போன்ற தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டவை முக்கிய விடயங்களில் ஒன்றாகிறது.

இவற்றை பாதுகாக்கும் சரியான முறையை பின்பற்றிய உதய மேலும் கூறியதாவது, 

"இவ்விபரத் துணுக்குகள் கவனமாக பிரிக்கப்பட்ட பின்னர், அவை அசிட் நீக்கப்பட்டு, மீண்டும் ஓவியத்தின் பின்னால் பாதுகாப்பான, அசிட் இல்லாத, தெளிவாக தெரிகின்ற அட்டைகளுடன் ஒட்டப்பட்டது.

இந்த 'சந்திப்புகள்' கண்காட்சியானது ஐரோப்பிய ஒன்றியம், கலை முன்னெடுப்புகளுக்கான ஸ்தாபனம், ஜோன் கீல்ஸ் ஸ்தாபகம் மற்றும் தேசிய நம்பிக்கை வங்கியின் நன்கொடையால் நிறுவப்பட்டதாகும். 

இலங்கையின் நவீன மற்றும் சமகால கலை அருங்காட்சியகமானது (MMCA இலங்கை)கல்வியை முதன்மைப்படுத்தும் ஒரு முன்முயற்சியாகும். 

பொதுமக்கள், பாடசாலைகள், சுற்றுலா பயணிகளின் நலன் மற்றும் இன்பத்துக்காக  நவீன மற்றும் சமகால கலைகளின் காட்சி, ஆராய்ச்சி, சேகரிப்பு மற்றும் பாதுகாப்புக்காக அர்ப்பணிக்கப்பட்ட பொது அருங்காட்சியகத்தை நிறுவுவதே இதன் நோக்கமாக உள்ளது.

மேலதிக தகவல்களுக்கு, இணையதளம் மூலம் www.mmcasrilanka.org அல்லது முகநூலில் (Facebook) www.facebook.com/mmcasrilanka மற்றும் படவரியில் (Instagram) https://www.instagram.com/mmcasrilanka/  ஆகிய இணைப்புகளில் இலங்கை MMCAஐ பின்தொடரவும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இறந்த தம் மூதாதையருடன் இயல்பாக பேசும்...

2024-04-18 12:15:34
news-image

வவுனியா, கோதண்டர் நொச்சிக்குளத்தில் நாகர் கால...

2024-04-18 10:23:08
news-image

'குரோதி' வருடப்பிறப்பு - சுப‍ நேரங்கள் 

2024-04-11 14:47:43
news-image

திருக்கோணேஸ்வரத்தில் சாமி தூக்கிய சுற்றுலா பயணிகள்...

2024-04-06 11:06:59
news-image

சித்தி விநாயகர் கும்பாபிஷேகம்

2024-03-28 16:01:41
news-image

நல்லூர் மனோன்மணி அம்மன் ஆலய பங்குனி...

2024-03-19 16:13:26
news-image

ஈழத்து லிங்காஷ்டகம் : மறந்துபோன வரலாறுகள்!...

2024-03-10 13:57:26
news-image

இன்று மகா சிவராத்திரி!  

2024-03-08 11:05:25
news-image

இன்று சர்வதேச தாய்மொழி தினம் 

2024-02-21 12:08:36
news-image

சிவானந்தினி துரைசுவாமி எழுதிய தந்தை -...

2024-02-07 13:18:00
news-image

வாழ்வில் பயத்தை அகற்றும் கம்பகரேஸ்வரர் :...

2024-01-29 17:43:35
news-image

அயோத்தி ராமர் கோவிலை இந்தியப் பிரதமர்...

2024-01-22 15:53:05