பந்துவீச்சில் ஜோசப், ஹோல்டர் அசத்தல் ; சிம்பாப்வேயை வென்றது மேற்கிந்தியத்தீவுகள்

19 Oct, 2022 | 08:40 PM
image

(என்.வீ.ஏ.)

ஹோபார்ட், பெலேரிவ் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்ற பி குழுவுக்கான ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் முதல் சுற்று போட்டியில் 154 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்து ஸிம்பாப்வேயை 122 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய மேற்கிந்தியத் தீவுகள் 31 ஓட்டங்களால் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது.

ஆரம்பப் போட்டியில் ஸ்கொட்லாந்திடம் முற்றிலும் எதிர்பாராதவிதமாக தோல்வி அடைந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு இன்றைய வெற்றி ஓரளவு திருப்தியைக் கொடுத்துள்ளது.

அல்ஸாரி ஜோசப் பதிவுசெய்த இந்த வருட உலகக் கிண்ணத்திற்கான அதிசிறந்த பந்துவீச்சு பெறுதியும் ஜேசன் ஹோல்டரின் துல்லியமான பந்துவீச்சும் மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றியை இலகுவாக்கின.

அப் போட்டியில் கணிசமான ஓட்டங்களைக் குவிக்க வேண்டும் என்பதை அறிந்து முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த  மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்ப வீரர் மேயர்ஸ் கய்ல் (13) குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த போதிலும் ஜொசன்சன் சார்ள்ஸ், எவின் லூயிஸ் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 49 ஓட்டங்கள் மேற்கிந்தியத் திவுகளுக்கு சற்று தெம்பூட்டுவதாக அமைந்தது.

எனினும் சுழல்பந்துவீச்சாளரகளை  ஸிம்பாப்வே   அறிமுகப்படுத்தியதும் விக்கெட்கள் சரியத் தொடங்கின.

சார்ள்ஸ், லூயிஸ் ஆகியோரின் இணைப்பாட்டத்தை சிக்கந்தர் ராஸா முடிவுக்கு கொண்டுவந்ததை அடுத்தே மேற்கிந்தியத் தீவுகளின் விக்கெட்கள் சரியத் தொடங்கின.

10ஆவது ஓவரில் 77 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்திருந்த மேற்கிந்தியத் தீவுகள் அதன் பின்னர் 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 5 விக்கெட்களை இழந்தது. (101 - 6 விக்.)

எனினும் 7ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த ரோவ்மன் பவல், அக்கீல் ஹொசெய்ன் ஆகிய இருவரும் 49 ஓட்டங்களைப் பகிர்ந்து  மொத்த எண்ணிக்கை 150 ஓட்டங்களைக் கடப்பதற்கு உதவினர்.

துடுப்பாட்டத்தில் ஜோன்ச்ஸ் சார்ள்ஸ் 45 ஓட்டங்களையும் ரோவ்மன் பவல் 28 ஓட்டங்களையும் அக்கீல் ஹொசெய்ன் ஆட்டமிழக்காமல் 23 ஓட்டங்களையும் எவின் லூயிஸ் 15 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஸிம்பாப்வே பந்துவீச்சில் சிக்கந்தர் ராஸா 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்ளெசிங் முஸாரபனி 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சோன் வில்லியம்ஸ் 17 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

154 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 18 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 122 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.

வெஸ்லி மெதேவியர், ரெஜிஸ் சக்கப்வா ஆகிய இருவரும் அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 14 பந்துகளில் 29 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது சக்கப்வா 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அதனைத் தொடர்ந்து ஸிம்பாப்வேயின் விக்கெட்கள் சரியத் தொடங்கியதுடன் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு துடுப்பாட்ட வீரர்கள் பிரகாசிக்கவில்லை.

மத்திய வரிசை வீரர் லூக் ஜொங்வே 29 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார். அவரைவிட ஆரம்ப வீரர்களில் ஒருவரான மெதேவியர் 27 ஓட்டங்களையும் ரெயான் பூரி 17 ஒட்டங்களையும் பெற்றனர்.

முதலாவது போட்டியில் போன்று இந்தப் போட்டியிலும் துடுப்பாட்டத்தில் அசத்துவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிக்கந்தர் ராஸா 14 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார்.

மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சில் அல்ஸாரி ஜோசப் 4 ஓவர்களில் 16 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஜேசன் ஹோல்டர் 3.2 ஓவர்களில் 12 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இந்த வருட உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் அல்ஸாரி ஜோசப்பின் பந்துவீச்சுப் பெறுதி அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியாக இப்போதைக்கு பதிவாகியுள்ளது.

இந்தப் போட்டி முடிவை அடுத்து பி குழு அணிகளின் சுப்பர் 12 சுற்றுக்கான வாயில் அகல திறந்துவிடப்பட்டுள்ளது. நான்கு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்றுள்ளதால் எஞ்சியிருக்கும் 2 போட்டிகளில் வெற்றிபெறும் அணிகள் சுப்பர் 12 சுற்றில் விளையாட தகுதிபெறும்.

ஆனால், வெள்ளிக்கிழமை மழை பெய்து இரண்டு போட்டிகளும் கைவிடப்பட்டால், தற்போது அணிகள் நிலையில் நிகர ஓட்ட வித்தியாசத்தில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் ஸ்கொட்லாந்தும் ஸிம்பாப்வேயும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

ஒருவேளை, மேற்கிந்தியத் தீவுகளுக்கும் அயர்லாந்துக்கும் இடையிலான போட்டி விளையாடப்பட்டு மற்றைய போட்டி கைவிடப்பட்டால் விளையாடப்படும் போட்டியில் வெற்றிபெறும் அணியும் ஸ்கொட்லாந்தும் சுப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.

ஸ்கொட்லாந்துக்கும் ஸிம்பாப்வேக்கும் இடையிலான போட்டி விளையாடப்பட்டு மற்றைய போட்டி கைவிடப்பட்டால் விளையாடப்படும் போட்டியில் வெற்றிபெறும் அணியும் மேற்கிந்தியத் தீவுகளும் சுப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

இலங்கையின் முதலாவது ஆசிய தங்கப் பதக்க...

2024-04-20 09:31:54
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41