(எம்.வை.எம்.சியாம்)
காலி- யக்கலமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் தந்தை மற்றும் அவருடைய 4 வயது மகன் காயமடைந்துள்ளனர்.
இந்தச் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இன்று (19) நண்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது
யக்கலமுல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கருவலகல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்தவர்கள் மீது இனந்தெரியாத நபர்களால் இவ்வாறு துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக யக்கலமுல்ல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
துப்பாக்கிச்சூட்டின் போது 4 வயது குழந்தை உள்ளிட்ட மூவர் காயமடைந்துள்ளனர். இதன் போது காயமடைந்த ஆண் ஒருவர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 34 வயதுடைய ஆந்தகல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார்
மேலும் காயமடைந்த மற்றைய நபர் மற்றும் 4 வயது குழந்தை கராப்பிட்டிய மற்றும் மாத்தறை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது காயமடைந்தவர்கள் 30 வயதுடைய ஒருவர் எனவும் மற்றும் அவருடைய 4 வயது மகன் உள்ளடங்குவதாகவும் அவர்கள் இருவரும் கருவலகல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
மோட்டார் சைக்கிளில் வருகை தந்த மூவர் 84 ரக துப்பாக்கியை பயன்படுத்தி குறித்த தரப்பினர் மீது துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார்கள்.
சம்பவத்தின் போது உயிரிழந்த நபர் கடந்த 2019 ஆம் ஆண்டு எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தில் பஸ் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் துப்பாக்கிதாரர்களுக்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கைது செய்யப்பட்டவர் எல்பிட்டிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் ஒருவர் என்று விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் யக்கலமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM