(எம்.நியூட்டன்)
வரலாற்றை அரசியலாகப் பார்க்கக்கூடாது அதனை வரலாறக பார்க்கப்படவேண்டும் என யாழ்.பல்கலைக்கழக முன்னாள் வரலாற்றுத்துறை பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவித்தார்.
யாழ்.பல்கலைக்கழக வேந்தர் தகைசார் வரலாற்றுத்துறை பேராசிரியர் சி.பத்மநாதனின் திருக்கேதீஸ்வரம் திருக்றுகோணேஸ்வரம் பற்றிய மூன்று ஆய்வு நூல்களின் வெளியீட்டு விழா இன்று (18) புதன்கிழமை யாழ்.பல்கலைக்கழ கையாலபதி கலையரங்கில் யாழ்.பல்கலைக்கழ துணைவேந்தர் பேராசிரியர் சி. சற்குணராஜா தலைமையில் இடம்பெற்றபோது நிகழ்வில் கருத்துரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
வரலாறு என்பது வரலாறாகக் காட்டப்படவேண்டும் அதனை நாங்கள் அரசியலாகப் பார்கக்க்கூடாது. அண்மையில் இளம் ஆ சிரியர் ஒருவர் இலங்கையில் பல்லிப்பணப் பண்பாடு பற்றிய ஆய்வு செய்திருந்தார் அந்த ஆய்வைப் பார்த்தபோது கிட்டத்தட்ட ஐரோப்பியர் காலம் வரை இலங்கையில் தமிழ் சிங்கள மக்களிடையே ஐக்கியமான சூழ்நிலை இருந்தது அரசியல் ஆதிக்கத்திற்காக போரிட்ட தமிழர் படையில் சிங்கள ப்படை வீரர்கள் இருந்தார்கள் சிங்கள மன்னர்களின் படையெடுப்பில் தமிழ் மன்னர்கள் இருந்தார்கள் திருமணங்கள் இருந்தன தென்னிலங்கையில் பல பெளத்த ஆலயங்களில் இந்துத் தெய்வங்கள் வழிபடப்பட்டன. பெளத்த கல்லூரிகளில் தமிழ் படிப்பித்தார்கள் பெளத்த துறவிகள் பலர் தமிழ் தெரிந்தவர்களாக இருந்தார்கள் இந்துக்குருமார் சிங்கள மொழி தெரிந்தவர்களாக இருந்தார்கள். சிங்கள மன்னர்கள் சிங்களக்க ல்வெட்டுக்களுடன் தமிழ் மொழி கல்வெட்டுக்களையும் வெளியிட்டிருந்தார்கள். இது இரு இனங்களுக்கிடையிலான வரலாற்று ஐக்கியம் இதனை நாங்கள் ஆராய்ந்ததைவிட முரண்பாடுகள் பற்றி ஆராய்ந்து பெருமைகொள்வதில் தான் வரலாற்று அறிஞர்கள் பலர் ஈடுபட்டுள்ளார்கள்.
நாங்கள் இந்த அரசியலில் இருந்து விலகி எங்களுடைய இனம் மத பண்பாடுகள் பற்றிப் பேசுகின்றபோது சமகாலத்தில் விரும்பியோ விரும்பாமலே அரசியலுக்குள் எங்களையும் இணைத்துக் கொள்வார்கள் அப்படியான வெளியீடுகள் வரும்போது இவர்களை தமிழ் தேசிய தீவிரவாதிகள் என்பார்கள் தீவிரவாதி என்பார்கள் சிலஇடங்கில் புலி ஆதரவாளர்கள் என்றும் கூறுவார்கள் பொதுவாக வரலாறு கூறுகின்றது கிடைக்கின்ற நம்பகரமான ஆதாரங்களைக் கொண்டு கட்டியொழுப்புவது தான் தொல்லியல் வரலாற்றினுடைய நோக்கமாகும். சில சந்தர்ப்பங்களில் ஆராரங்கள் கிடைக்காத நிலை ஊகங்கள் வெளிவரலாம் அவை பிற்காலத்தில் நிராகரிக்கப்படலாம் அதில் தவறில்லை ஆனால் உண்மையான வரலாற்று ஆதாரங்களை வைத்து உண்மையைச் செல்லுகின்ற நிலையில் ஒரு இனத்தை மதத்தை முன்னிலைப்படுத்தி பெய்யான தரவுகளை மக்களிடம் கூறி வழிநடத்துவது ஒரு வரலாற்று ஆசிரியருடைய பணியல்ல
இத்தகைய எல்லாவற்றையும் சரியாக புரிந்து கொண்டு நடுநிலையோடு நிதானமாக வரலாற்றைப் படைக்கக்கூடிய பெருமகன் யாழ்.பல்கலைக்கழக வேந்தர் தகைசார் பேராசிரியர் பத்மநாதன் அவருடைய கல்விப்புலம் 50 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தாலும் 1974 ஆம் ஆண்டிலிருந்து அவருடைய கல்விச் செயற்பாடுகளை நன்கு அறிந்தவன் . இவருடைய இந்த நூல் வெளியீடு பல்வேறு ஆதாரங்களுடன் தான் இந்த நூல் வெளியீடு வந்துள்ளது. இத்தகைய அரிய நூல்களை வெளியிடுவதன்மூலம் யாழ்பல்கலைக்கழகம் மட்டுமன்றி அனைத்து துறைசார்ந்தவர்களும் பெருமையடைகின்றார்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM