(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)
நல்லாட்சி அரசாங்கம் நீதித்துறையில் ஏற்படுத்திய சிறந்த மாற்றங்களை தொடர்ந்து முன்னெடுத்தேன். சட்டத்துறை வல்லுணர்கள் எவ்வித எதிர்பார்ப்புமில்லாமல் நாட்டுக்காக சட்ட திருத்த நடவடிக்கையில் ஈடுப்பட்டார்கள்.
எதிர்வரும் காலங்களில் பெருமளவான சட்டங்கள் திருத்தம் செய்யப்படும் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றில் புதன்கிழமை (19) நீதி,நிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ முன்வைத்த சட்டமூலங்கள் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டார்.
2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீதியமைச்சை பொறுப்பேற்றதன் பின்னர் காலத்துக்கு பொருத்தமான சட்டத்திருத்தங்களை முன்னெடுக்க விசேட கவனம் செலுத்தப்பட்டது. திருத்தங்களின் போது ஐந்து துறைகளை இனங்கண்டு அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தோம்.
நீதிமன்ற நடவடிக்கைகளை டிஜிட்டல் மயப்படுத்தல், நீதி சேவையை விரிவுப்படுத்த ஆரம்பக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் முக்கிய சட்டங்களை மறுசீரமைக்க சட்ட வல்லுணர்களின் ஆலோசனை கோரப்பட்டு அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய சட்டங்களை மறுசீரமைக்கும் வகையில் சிவில் சட்டம்,வணிக சட்டம் மற்றும் குற்றச் சட்டங்கள் தொடர்பில் ஆராய மூன்று உப குழுக்கள் நியமிக்கப்பட்டன.பல்வேறு துறைகளில் இடம்பெற வேண்டிய மாற்றங்கள் குறித்து அடையாளம் காணப்பட்டு நீதியமைச்சர் என்ற ரீதியில் 76 அமைச்சரவை பத்திரங்களை அக்காலப்பகுதியில் சமர்ப்பித்தேன்.
நல்லாட்சி அரசாங்கம் நீதி சேவையில் முன்னெடுத்த பல சிறந்த திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்தேன். சிறந்த திட்டங்களின் பயனை நாட்டு மக்கள் பெற்றுக்கொள்வோம். எதிர்வரும் காலங்களில் பல சட்டங்கள் திருத்தம் செய்யப்படும்.
சட்டத்துறையில் முக்கிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படும்.சட்டத்துறையுடன் தொடர்புடையவர்கள் எவ்வித எதிர்பார்ப்புமின்றி சட்ட திருத்த நடவடிக்கைகளில் அர்ப்பணிப்புடன் ஈடுப்படுகிறார்கள். 80 துறைகளின் சட்டங்கள் இவ்வாறு திருத்தம் செய்ய அவதானம் செலுத்தப்பட்டு,அதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
சிவில் சட்டம்,வணிக சட்டம் மற்றும் குற்ற சட்டம் ஆகியவறை மறுசீரமைப்பதற்காக நியமிக்கப்பட்ட உப குழுக்களின் அறிக்கை வெகுவிரைவில் சபையில் சமர்ப்பிக்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM