உள்ளக பொறிமுறை ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Published By: Digital Desk 5

19 Oct, 2022 | 09:26 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

சர்வதேச விசாரணைகள் ஊடாகவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.  உள்ளக பொறிமுறை ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது.

புலிகள் அல்லது தமிழர்கள் மீதும் சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்படுமாக  இருந்தால் அது தொடர்பில் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றில் புதன்கிழமை (19) இடம்பெற்ற இடம்பெற்ற ஐந்து சட்டமூல திருத்தங்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சட்டக்கல்லூரியின் அனைத்துப் பரீட்சைகளையும் ஆங்கில மொழியில் நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை முன்னாள் நீதி அமைச்சர் வெளியிட்டிருந்தார். இதுவொரு நியாயமற்ற செயற்பாடு. 1956ஆம் ஆண்டு ஆங்கில மொழிக்கு எதிராகப் போராடினார்கள்,இன்று அதற்கு எதிராக செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த வர்த்தமானியால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆங்கில மொழியில் பரீட்சைகளை நடத்துவதற்கு எந்தவிதமான வழிமுறைகளையும் பின்பற்றாமல் ஒரேநாளில் தீர்மானம் எடுத்திருக்கக்கூடாது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டப் பிரேரணை தொடர்பில் வெளிவிவகார  அமைச்சர் அலி சப்ரி அமைச்சின் அறிவிப்பை விடுத்து  உரையாற்றியிருந்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்  2012ஆம் ஆண்டு முதல் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டாலும் அதனால் இலங்கையில் எதுவும் நடவிக்கவில்லை. நிறைவேற்றப்பட்ட பிரேரணைனகளுக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்கப்படவில்லை.

தென்னாப்பிரிக்காவில் உள்ள உண்மைகளைக் கண்டறிவதற்கான ஆணைக்குழு தொடர்பில் சிந்திப்பதாக அமைச்சர் அலி சப்ரி கூறுகிறார்.

ஆனால் இந்த ஆணைக்குழுவை தென்னாப்பிரிக்காவில் அமைக்கக் காரணமாக இருந்த டெஸ்மண்ட் டுடுவே அந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.

உண்மைகளைக் கண்டறிவதற்கான ஆணைக்குழு முன்பாக படுகொலைகளை செய்தவர்கள் மன்னிப்புக்கோருவதும், பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் விடுவதுமே நடக்கும். இதனை தவிற வேறேதும் நடக்காது.படுமோசமானக் குற்றச்செயல்கள் இந்த ஆணைக்குழுவால் மூடிமறைக்கப்படும். இந்த முறையே இலங்கைக்கு வேண்டுமென அலி சப்ரி கூறுகிறார்ஃ

பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கையின் உள்ளக வழிமுறையின் கீழ் நீதியைப் பெற்றுக்கொடுக்கவே முடியாது. எனவே சர்வதேச பொறிமுறையே தேவை. கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை என்றால் இலங்கை சர்வதேச விசாரணைக்கு முகங்கொடுக்க வேண்டும். இலங்கை மட்டுமல்ல புலிகளும், தமிழர்களும் கூட இந்த விசாரணைகளுக்கு முகங்கொடுக்க வேண்டும். அதில் கவலைப்படுவதற்கு எமக்கு ஒன்றுமில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குருந்தூர்மலை விவகாரத்தில் ரவிகரன் எம்.பி உள்ளிட்ட...

2025-01-16 21:00:00
news-image

சீனாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நாட்டுக்கு...

2025-01-16 19:57:54
news-image

குறுகிய காலத்தில் மக்களால் வெறுக்கப்படும் தேசிய...

2025-01-16 20:01:43
news-image

பாதாள உலக செயற்பாடுகளை ஒழித்து துப்பாக்கிச்...

2025-01-16 20:02:50
news-image

4 வயது பிள்ளையுடன் நீர்த்தேக்கத்தில் பாய்ந்த...

2025-01-16 18:58:21
news-image

மட்டு. தாந்தாமலை பகுதியில் உயிரிழந்த நிலையில்...

2025-01-16 18:27:33
news-image

மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை...

2025-01-16 18:07:01
news-image

கொழும்பு துறைமுக நகர கடலில் மூழ்கிய...

2025-01-16 17:35:54
news-image

ஜனவரி மாதத்தை தமிழ் மொழி, பாரம்பரிய...

2025-01-16 17:09:37
news-image

சிறீதரன் எம்.பி முடிந்தால் ஸ்டாலினுடன் பேசி...

2025-01-16 17:01:14
news-image

இலங்கையில் தமிழர்களுக்கு பொறுப்புக்கூறல் நீதியை உறுதிசெய்வதற்கான...

2025-01-16 17:13:43
news-image

ஜனாதிபதி பீஜிங்கில் சீன மக்கள் வீரர்களின்...

2025-01-16 17:31:50