இரட்டை பிரஜா உரிமை திருத்தத்துக்கு ஆதரவளிப்போம் : பிரேமநாத் சி தொலவத்த

Published By: Digital Desk 5

19 Oct, 2022 | 09:25 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பின் 22ஆம் திருத்தத்துக்கு பொதுஜன பெரமுன ஆதரவாக வாக்களிப்பதுடன் இரட்டை பிரஜா உரிமை  திருத்தத்துக்கும் ஆதரவளிப்போம் என ஆளும் கட்சி உறுப்பினர் பிரேமநாத் சி தொலவத்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) இடம்பெற்ற நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசியலமைப்பு 22ஆம் திருத்தச் சட்டமூலத்தை நாங்கள் கொண்டுவந்து, அதற்கு ஆதரவாக வாக்களிப்போம். அதில் எந்த பிரச்சினையும் இல்லை. 22ஆம் திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும் என்றே நாங்கள் கடந்த காலங்களில் இருந்து தெரிவித்து வந்தோம். 

அதேபோன்று 22ஆம் திருத்தத்தில் பாராளுமன்றத்தை கலைக்கும் காலம் தொடர்பில் எமக்கு பிரச்சினை இல்லை. அந்த திருத்தம் கொண்டுவந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த பாராளுமன்றத்துக்கு இன்னும் இரண்டு வருடங்களே இருக்கி்ன்றன. எமது கட்சி 22ஆம் திருத்தத்தில் மேற்கொள்ளவேண்டிய திருத்தங்களை முன்வைத்திருக்கின்றது.

அதேபோன்று இரட்டை பிரஜை உடையவர்கள் பாராளுமன்றத்துக்கு வருவது தொடர்பான திருத்தத்துக்கு நாங்கள் ஆதரவாக வாக்களிப்போம். அதில் மாற்றுக்கருத்து இல்லை. அதனால் 22ஆம் திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சி பொதுஜன பெரமுன தொடர்பாக பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருவதை நிறுத்தவேண்டும். 22ஆம் திருத்தம் கொண்டுவருவதற்கு எமது கட்சி சில நிபந்தனைகளை விதிப்பதால் அதனை கொண்டுவர தாமதிப்பதாக தெரிவிக்கின்றனர்.

எனவே அரசியலமைப்பின் 22ஆம் திருத்தத்தை கொண்டுவரும் எமது நிலைப்பாட்டில் மாற்றம் இ்ல்லை. அதனை நாங்கள் கொண்டுவருவொம். அதபோன்று அதில் தெரிவிக்கப்பட்டிருக்கும் முக்கியமான திருத்தங்களுக்கு எமது கட்சி ஆதரவாக வாக்களிக்கும் என்பதை தெளிவாக தெரிவிக்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இயற்கை அழகுசாதனப் பொருட்கள் என கூறி...

2026-04-12 14:59:21
news-image

மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம்...

2026-04-12 14:50:41
news-image

மின்சார சபை ஊழியர்களுக்கு உரிய இழப்பீட்டுத்...

2026-04-12 14:32:14
news-image

நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள்! - தையிட்டி...

2026-04-12 13:19:33
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் உள்ள...

2026-04-12 13:18:45
news-image

“முழு நாடுமே ஒன்றாக” வேலைத்திட்டம் :...

2026-04-12 13:15:55
news-image

மட்டக்களப்பில் களைகட்டும் சித்திரை புத்தாண்டு: உற்சாகத்தில்...

2026-04-12 12:42:32
news-image

சட்டவிரோத பஸ் போக்குவரத்து: கொழும்பில் 07...

2026-04-12 12:18:38
news-image

புத்தளத்தில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2026-04-12 11:42:41
news-image

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு : ஒரே...

2026-04-12 11:29:19
news-image

நிலக்கரி தொடர்பான மேலதிக செலவுகளை நுகர்வோரிடமிருந்து...

2026-04-12 11:47:49
news-image

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் சொத்துக்களுக்கு...

2026-04-12 10:44:49