ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 ஒக்டோபர் மாதத்தில் பணவீக்கமானது 5 சதவீதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
செப்டெம்பர் மாதத்தில்4.7 சதவீதமாக பதிவு செய்யப்பட்டிருந்தது பணவீக்கமானது 0.3 சதவீத அதிகரிப்புடன் 5.0 சதவீதமாக உயர்வடைந்து பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வுயர்வுக்கு உணவு மற்றும் உணவல்லா வகைகள் தாக்கம் செலுத்தியுள்ளன. ஆண்டுச் சராசரி அடிப்படையொன்றின் மீது அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2016 செப்டெம்பர் மாதத்தில் 3.8 சதவீதத்திலிருந்து 2016 ஒக்டோபர் மாதத்தில் 4 சதவீதத்திற்கு அதிகரித்தது.
மாதாந்த மாற்றங்களைக் கருத்திற்கொள்ளும் போது, தேசிய நுகர் வோர் விலைச் சுட்டெண் 2016 செப்டெம்பர் மாத்தில் 113.5 சுட் டெண் புள்ளியிலிருந்து 2016 ஒக்டோபர் மாத த்தில் 114.7 புள்ளிக்கு அதிகரித்தது.
இம் மாதாந்த அதிகரிப்பிற்கு உணவு வகை சார்ந்துள்ள விடயங்களின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்புக்களே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
அதே போல், உணவு வகையில் அரிசி, தேங்காய், எலுமிச்சம் பழம், காய்கறிகள் போன்றவற்றின் விலைகள்இம்மாத காலப்பகுதியில் அதிகரித்தன.
மேலும் குடி வகை, குடிபானங்கள், புகையிலை ஆடை மற்றும் காலணிகள் தளபாடம், வீட்டலகுகளின் சாதனங்கள் மற்றும் வழமையான வீட்டு அலகுகளின் பேணல்பொழுதுபோக்கு, கலாசாரம் உணவகங்கள், சுற்றுலா விடுதிகள், பல்வகைப் பொருட்கள் மற்றும் பணிகள் துணை வகைகளின் விலைகளும் 2016 ஒக்டோபர் மாதத்தில் அதிகரித்தன. அதேவேளை, வீடமைப்பு, நீர், மின்வலு, வாயு, மற்றும் ஏனைய எரிபொருட்கள் நலம், போக்குவரத்து தொழில்நுட்பம் மற்றும் கல்வித் துணை வகைகள் இம்மாத காலப்பகுதியில் மாற்றமின்றி காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பொருளாதாரத்தின் அடிப்படைப்பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட் டெண் மையப் பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு மற்றும் ஆண்டுச் சராசரி அடிப்படை இரண்டிலும் 2016 ஒக்டோபர் மாத காலப்பகுதியில்ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 5.7 சதவீதமாக மாற்ற மின்றி காணப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM