(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பாராளுமன்றத்துக்கு சமமான மக்கள் சபை ஒன்றை அமைப்பதற்கு தயாராக வருவதாக ஊடகங்களின் மூலம் அறியக்கிடைத்தது.
அவ்வாறான சபைகளை அமைப்பது சட்ட விராேதமாகும் என சபைமுதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) விசேட கூற்றொன்றை முன்வைத்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
பாராளுமன்றத்துக்கு சமமான மக்கள் சபை ஒன்றை நடத்துவதற்கு தயாராகி வருவதாக ஊடகங்கள் மூலம் அறியக்கிடைக்கின்றது. அரசியலமைப்பின் 70ஆவது பிரிவின் பிரகாரம் அரசியலமைப்பு அதிகாரம் பாராளுமன்றத்துக்கே இருக்கின்றது.
அதேபோன்று 71ஆவது பிரிவின் பிரகாரம் பாராளுமன்றத்தினால் பாராளுமன்றத்தின் அதிகாரத்தை வேறு எதற்கும் வழங்கக்கூடாது, அதேபோன்று அரியலமைப்பு அதிகாரம் உள்ள எந்த அதிகார சபையும் பாராளுமன்றத்துக்கு வெளியில் அமைக்கப்படக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அதன் பிரகாரம் நாட்டில் தேர்தல் முறை ஒன்று இருக்கின்றது. பாராளுமன்ற ஆட்சிக்காலம் தொடர்பில் அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கி்ன்றது.
ஆட்சிக்காலத்துக்கு முன்னர் பதவிக்காலம் மாற்றமடைவதாக இருந்தால் அது எவ்வாறு அமையவேண்டும் என இருக்கின்றது.
அதன் பிரகாரமே சட்ட ரீதியிலான தேர்தல் ஊடாக தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் உடைய பாராளுமன்றம் இருக்கின்றது.
அதனால் மக்களின் பிரச்சினைகள் மற்றும் சட்டம் இயற்றும் நடவடிக்கை மேற்கொள்ளும் அதிகாரம் இருப்பது மக்கள் பிரதிநிதிகள் உள்ள பாராளுமன்றத்திற்காகும்.
அதனால் பாராளுமன்றத்துக்கு சமான நிறுவனம் ஒன்றை சட்ட ரீதியில் அமைப்பதற்கு யாருக்கும் இடமில்லை. பாராளுமன்றத்துக்கும் அந்த அதிகாரம் இல்லை.
அதனால் பாராளுமன்றத்துக்கு சமமான சபை ஒன்றை பாராளுமன்றத்துக்கு வெளியில் அமைப்பதற்கு சட்டத்தில் இடமில்லை. இதுதொடர்பாக வெளியாகும் ஊடக அறிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும் என்றார்.
இதற்கு சபாநாயகர் பதிலளிக்கையில் இந்த பிரசினையை சிறப்புரிமை குழுவுக்கு ஆற்றுப்படுத்துகின்றேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM