இந்தியாவின் முதல் பெண் சக்கரநாற்காலி கூடைப்பந்தாட்ட வீராங்கனை - முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட பின் சாதித்த கதை

Published By: Rajeeban

19 Oct, 2022 | 12:02 PM
image

முன்னர் பயங்கரவாத நடவடிக்கைகளிற்கு பெயர் பெற்ற பயங்கரவாதிகளின் மையமாக விளங்கிய பகுதி தற்போது கிரிக்கெட் யூடோ கூடைப்பந்து உட்பட அனைத்து விளையாட்டுகளிலும் திறமையான இளையவர்களை தேசத்திற்கு வழங்கும் பகுதியாக மாறியுள்ளது.

அவ்வாறான ஒரு சாதனையாளர் இளம் இஸ்ராத் அக்தர் காஸ்மீரின் பாரமுல்லாவை சேர்ந்த சர்வதேச சக்கர நாற்காலி கூடைப்பந்தாட்ட வீரர் என  ரிசேச் சென்டர் குளோபல் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவை சர்வதேச சக்கர நாற்காலி கூடைப்பந்தாட்ட போட்டிகளில் பிரதிநிதித்துவம் செய்த முதற்பெண் இஸ்ராத் அக்தர் என ரிசேச் சென்டர் குளோபல் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

2016 இல் நான் உயரமான கட்டிடத்திலிருந்து விழுந்ததில் எனது முள்ளந்தண்டு கடுமையாக பாதிக்கப்பட்டது என்னை உடனடியாக பாரமுல்லா மருத்துவமனைக்கு கொண்டுசென்றார்கள் பின்னர் ஸ்ரீநகருக்கு கொண்டு சென்றார்கள் மூன்று நாட்களின் பின்னர் சத்திரகிசிச்சை இடம்பெற்றது சத்திரகிசிச்சைக்கு பின்னர் ஒரு மாதகாலம் நான் மருத்துவமனையில் தங்கியிருந்தேன் வீடு திரும்பிய பின்னர் என்ன நடந்தது என்பதை என்னால் உண்மையில்புரிந்துகொள்ள முடியவில்லை ஆறு மாத காலத்தின் பின்னரும் எனது நிலைமையில் முன்னேற்றம் ஏற்படவில்லை, நான் எப்போதும் கட்டிலிலேயே இருப்பேன் எனது குடும்ப உறுப்பினர்கள் எனக்கு உணவளிப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு வருடத்தின் பின்னர் ஒருநாள் தொலைபேசி அழைப்பொன்று வந்தது அவர்கள் என்னை போன்றவர்களிற்கு சக்கர நாற்காலி வழங்கும்  முகாம் இடம்பெறவுள்ளது என தெரிவித்தனர்.

எனது சகோதரி என்னை அங்கு செல்லுமாறு வற்புறுத்தினார், நான் அங்கு சென்றவேளை மருத்துவர்கள் என்னை மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தினார்கள் அவர்கள் மருத்துவமனைக்கு வந்து சக்கரநாற்காலியை பயன்படுத்த பழகிக்கொள்ளுமாறு கேட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் சக்கரநாற்காலியை பயன்படுத்தி எனது வேலைகளை எவ்வாறு செய்வது என கற்றுத்தந்தனர்,எனவும் அவர் தெரிவித்தார்.

கூடைப்பந்தாட்டத்தில் ஈடுபடும் கனவு குறித்து கேள்வி எழுப்பியவேளை இந்தக்கட்டத்திலேயே சில இளைஞர்கள் சக்கரநாற்காலியை பயன்படுத்தி கூடைப்பந்தாட்டத்தில் ஈடுபடுவதை கண்டேன் நான் அவர்களை நெருங்கி நானும் விளையாடமுடியுமா என கேட்டேன்  அவர்கள் இணங்கினார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீநகரில் இந்திய சக்கரநாற்காலி சம்மேளனம் இடம்பெறுவதாக தெரிவித்தனர் தேசிய அணியொன்று தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

எனது மன அழுத்தத்தை சமாளிப்பதற்காக என்னை மும்முரமாக வைத்திருக்க விரும்பினேன் நான் ஸ்ரீநகருக்கு சென்று பல இளைஞர்கள் யுவதிகளுடன் விளையாடினேன் எனவும் இஸ்ரத் அக்தர்  தெரிவித்தார்.

அதன் பின்னர் தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்டேன் நான் முன்னர் ஒருபோதும் கூடைப்பந்து விளையாடததால் அது எனக்கு மிகவும் ஆச்சரியத்தை அளித்தது  கூடைபந்து எனக்னு ஒரு கிசிச்சையாக மாறியது எனவும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச அளவில் சக்கரநாற்காலி கூடைபந்து போட்டிகளில் இந்தியாவை முதன்முதல் பிரதிநிதித்துவம் செய்த பெண் இஸ்ரட் அக்தர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்