நிலைமாறா பொருளாதாரக் கொள்கை : அசுர வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் இந்தியா

Published By: Nanthini

19 Oct, 2022 | 12:10 PM
image

(எம். மனோசித்ரா)

லகில் நிலப்பரப்பின் அடிப்படையில் 7ஆவது பெரிய நாடாகவும், சனத்தொகை அடிப்படையில் 2ஆவது பெரிய நாடாகவும் காணப்படும் இந்தியா வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தையே கொண்டுள்ளது. 

எனினும், ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டால் கூட நிலைமாறா பொருளாதாரக் கொள்கையை பின்பற்றி, 2047ஆம் ஆண்டாகும்போது, தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியை 40 டிரில்லியன் டொலர் வரை விரிவாக்கும் இலக்கை நோக்கி இந்தியா பயணித்துக்கொண்டிருக்கிறது.

இந்திய தொழிற்துறை கூட்டமைப்பானது (Confederation of Indian Industry - CII) இந்த நிலைமாறா பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையில், இந்தியாவின் அசுர வளர்ச்சிக்கான கணிப்பீடொன்றை மேற்கொண்டுள்ளது. 

அந்த கணிப்பீட்டுக்கமையவே, 2047இல் அடைய எதிர்பார்க்கும் இலக்கையும் இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு வெளிப்படுத்தியுள்ளது.

உலக பொருளாதார வளர்ச்சி மந்தமாக காணப்பட்டாலும், இந்தியா, உலகில் மிக வேகமான பொருளாதார வளர்ச்சி மிக்க நாடாக காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவைப் போன்ற பாரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில், தடுப்பூசி வழங்கும் சவாலை அரசாங்கம் வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளது. 

இந்தியாவின் விரைவான பொருளாதார மீட்சிக்கு பரந்தளவில் தடுப்பூசி வழங்கப்பட்டமையின் ஊடான பாதுகாப்பு ஒரு முக்கிய காரணியாக கருதப்படுகிறது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2021 நிதியாண்டை விட, இவ்வாண்டு குறிப்பிட்டளவு அதிகரிப்பை எட்டியுள்ளது. அதற்கமைய 6.6 சதவீதமாக காணப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி, இவ்வாண்டு ஒகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் 8.7 சதவீதமாக விரிவடைந்துள்ளது.

நேரடி வெளிநாட்டு முதலீட்டுக்கு மிகவும் விரும்பத்தக்க இடமாக இந்தியா உள்ளது. 

2021 - 2022 காலகட்டத்தில் இந்தியாவின் நேரடி வெளிநாட்டு முதலீடு 3.4 சதவீதமாக காணப்படுகிறது. 

2023 ஏப்ரல் - ஜூலை மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இதனை 4.7 சதவீதமாக அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த ஆண்டின் முதலீடான 27.9 பில்லியன் டொலரை, 29.2 பில்லியன் டொலராக அதிகரிப்பதே இதன் நோக்கமாகும் என்று இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு குறிப்பிடுகிறது. 

ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான சமீபத்திய உலகளாவிய முதலீட்டு அறிக்கை 2022இன்படி, நேரடி வெளிநாட்டு முதலீட்டுக்கான உலகளாவிய விரும்பத்தக்க நாடாக 7ஆவது இடத்தில் இந்தியா காணப்படுகிறது. 

2021 - 2022இல் இந்தியா அதிகபட்ச ஏற்றுமதியை பதிவு செய்தது. 

எனினும், 2020 - 2021இல் கொவிட் 19 தொற்றுநோயால் வர்த்தகத்துறையில் ஏற்பட்ட இடையூறுகளுக்குப் பிறகு இந்தியாவின் ஏற்றுமதியின் வளர்ச்சி வலுவாக மீண்டுள்ளது.

இந்தியாவின் ஏற்றுமதி 2021 - 2022இல் 419.7 பில்லியன் டொலர் என்ற சாதனையை எட்டியது. இதன் மூலம் முந்தைய ஆண்டை விட 40 சதவீதத்துக்கும் அதிகமான வளர்ச்சியை இந்தியா பதிவு செய்தது. 

இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை உயர்த்துவதற்கான வலுவான கட்டமைப்பு சீர்திருத்தங்களின் பின்னணியில் இந்த சாதனை பதிவாகியுள்ளது.

ஏனைய அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் இந்தியாவுடன் ஒப்பிடும்போது அரைமடங்குக்கும் குறைவான ஏற்றுமதி வளர்ச்சியையே கொண்டுள்ளன. உதாரணமாக, 2021 - 2022 காலப்பகுதியில் அமெரிக்கா 23%, ஜப்பான், ஜேர்மன் மற்றும் பிரித்தானியா 18%, சீனா 17% என்ற அடிப்படையிலேயே ஏற்றுமதியை கொண்டுள்ளன.

எவ்வாறிருப்பினும், உள்நாட்டு பணவீக்கம் மத்திய வங்கியின் இலக்கை விட அதிகமாக இருப்பதால் சவால்கள் நீடிக்கின்றன. ஐரோப்பாவில் நடந்த போர் 'பணவீக்கத்தின் உலகமயமாக்கலுக்கு' வழிவகுத்தது. இது பொருட்களின் விலைகளை உயர்த்தியுள்ளது. எவ்வாறாயினும், எரிபொருள் தவிர்ந்த ஏனைய பொருட்களின் விலைகள் சமீபத்திய மாதங்களில் கனிசமானளவு சரிவடைந்துள்ளன.

நீண்ட கால அடிப்படையில், 2047இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 40 டிரில்லியன் அமெரிக்க டொலர்களை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், 2020 - 2050க்கு இடையில் உழைக்கும் வயதுடைய மக்கள் தொகை அதிகரிக்கும் சேர்க்கை குறைந்துகொண்டே இருக்கும். 

எனினும், கல்வி மற்றும் திறன் மேம்பாடு இதனை ஈடு செய்வதற்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

இந்தியாவின் உட்கட்டமைப்பு செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உலகிலேயே மிக உயர்ந்த ஒன்றாகும். தேசிய உட்கட்டமைப்பு மூலம் இந்திய அரசு 2019 - 2024ஆம் ஆண்டுக்குள் உள்கட்டமைப்புத்துறையில் 1.8 டிரில்லியன் மதிப்பிலான திட்டங்களை தொடங்கியுள்ளது. இது இந்தியாவில் இணைப்பு, போட்டித்திறன் மற்றும் உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பை மேம்படுத்தும்.

டிஜிட்டல்மயமாக்கலை நோக்கி நகரும் இந்தியா, கடந்த பத்தாண்டுகளில் தொலைத்தொடர்பு மற்றும் பிராட்பேண்ட் சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் வலுவான அதிகரிப்பை கண்டுள்ளது. இது டிஜிட்டல்மயமாக்கலுக்கான ஆரோக்கியமான மாற்றத்தை குறிக்கிறது.

சீர்திருத்தங்களில் வலுவான கவனம் செலுத்தும் கொள்கைச் சூழலை இந்தியா கொண்டுள்ளது. இந்த சீர்திருத்த கவனம் கூட்டாட்சியின் அரசியலமைப்புக் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி செயலாளரை சந்தித்த அமெரிக்க இராஜதந்திரிகள்

2023-05-27 22:30:22
news-image

சிறுவர்கள்  கடத்தல் : பின்னணியில் நடப்பது...

2023-05-26 16:41:31
news-image

அறகலய மீதான அவதூறுகள் 

2023-05-26 12:00:54
news-image

கொரோனாவை விட கொடூர தொற்று வரப்போகிறது!...

2023-05-25 14:51:14
news-image

குறைவடையப் போகும் வட்டி வீதங்கள் ?

2023-05-24 16:43:35
news-image

ராஜபக்ஷர்களின் இலக்கு : பிரதமர் பதவியா?...

2023-05-23 21:42:25
news-image

தேசிய நல்லிணக்கத்துக்கு இருதரப்பு கருத்தொருமிப்பு அவசரமானது,...

2023-05-22 22:08:35
news-image

சுமந்திரனின் பிரேரணையை வரவேற்கும் டிலான் எம்.பி.

2023-05-22 14:01:41
news-image

ரஷ்ய வைரம் வேண்டாம் !

2023-05-19 16:12:46
news-image

அரசியல் தீர்வு பேச்சுவார்த்தை : தேர்தலுக்கானதா?

2023-05-18 17:24:35
news-image

மக்களின் விருப்பமே 'மலையகம் 200 முத்திரை' 

2023-05-18 12:51:03
news-image

மக்களின் விவேகத்தை நிந்தனை செய்யும் ராஜபக்ஷக்களின்...

2023-05-18 10:57:50