துருக்கி- கிறீஸ் எல்லையில் 92 குடியேற்றவாசிகள் நிர்வாண கோலத்தில் காணப்பட்டமை குறித்து விசாரணை நடத்துமாறு ஐநா வலியுறுத்தியுள்ளது.
துருக்கியுடனான எல்லையிலுள்ள அவ்ரோஸ் நதிக்கு அருகில் கடந்த வெள்ளிக்கிழமை 92 ஆண்கள் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டனர் என கிறீஸ் (கிரேக்கம்) தெரிவித்துள்ளது.
இவர்கள் துருக்கியிலிருந்து எவ்ரோஸ் நதியைக் கடந்து கிறீஸுக்குள் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் என கிறீஸ் அரசாங்கம் கூறுகிறது. எனினும் துருக்கிய அரசாங்கம் இதை நிராhகரித்துள்ளது.
மேற்படி ஆண்களில் பெரும்பாலானோர் ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக் குடியேற்றவாசிககளின் வருகையை ஐரோப்பிய எல்லைப் பாதுகாப்பு முகவரகமான ஃபுரொண்டெக்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
இக்குடியேற்றவாசிகள் ஏறத்தாழ நிர்வாணமாக காணப்பட்டனர் எனவும், சிலரின் உடலில் காயங்கள் காணப்பட்டதாகவும் ஃபுரொண்டெக்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர் என அம்முகவரகத்தின் பேச்சாளர் பவுலினா பகுலா தெரிவித்துள்ளார்.
அகதிகளுக்கான ஐ.நா உயர் ஸ்தானிகராலயம் இது தொடர்பாக டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், 'கிறீஸ் - துருக்கி எல்லையில் கணடுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும், ஆடைகள் களையப்பட்ட 92 பேர் குறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் படங்கள் தொடர்பில் நாம் ஆழ்ந்த கவலையடைந்துள்ளோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி நபர்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதற்கு கிறீஸ் அதிகாரிகளுடன் ஃபுரண்டெக்ஸ் அதிகாரிகள் இணைந்து செயற்படுவதாக பவுலினா பகுலா தெரிவித்துள்ளார்.
உரிமை மீறல்கள் இடம்பெற்றிருக்கக்கூடிய சாத்தியம் குறித்து ஃபுரொண்டெக்ஸ் முகவரகத்தின் அடிப்படை உரிமைகள் தொடர்பான அதிகாரிக்கு அம்முகவரகம் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
குடியேற்றவாசிகள் தொடர்பாக கிரேக்கமும் துருக்கியும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக சுமத்தி வருகின்றன.
இந்நிலையில், சட்டவிரோத குடியேற்றத்தை துருக்கி தூண்டுவதாக கிரேக்கத்தின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தாகிஸ் தியோடோரிகோஸ் கூறியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையாகவுள்ள ஆற்றுக்கு, துருக்கியின் 3 இராணுவ வாகனங்களில் குடியேற்றவாசிகள் ஏற்றிவரப்பட்டதாக அக்குடியேற்றவாசிகளில் சிலர், ஃபுரொண்டெக்ஸ் முகவரகத்திம் தெரிவித்தனர் எனவும் தொலைக்காட்சியொன்றில் அமைச்சர் தாகிஸ் தியோடோரிகோஸ் கூறியுள்ளார்.
ஆனால், கிரேக்கத்தின் குற்றச்சாட்டுகளை துருக்கி நிராகரித்துள்ளது.
துருக்கிய ஜனாதிபதி தாயீப் ஏர்தோகானின் உயர் ஊடக அதிகாரி பஹ்ரிதின் அல்துன் இது தொடர்பாக கூறுகையில், 'அகதிகளை மோசமாக நடத்துவதையும் உடனடியாக கைவிடுமாறும் கிறீஸை நாம் வலியுறுத்துகிறோம்.
இந்த தோல்வியடைந்த, அபத்தான முயற்சிகளின் மூலம், ஒடுக்கப்பட்ட மக்களின் இப்படங்களை வெளியிட்டதனால், அகதிகளின் கௌரவத்தை தான் மதிக்கவில்லை என்பதை கிறீஸ் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார்.
குடியேற்றவாசிகளை துருககிக்கு சட்டவிரோதமாக திருப்பி அனுப்புவதற்கு கிறீஸ் பல சந்தர்ப்பங்களில் முயற்சித்துள்ளதாகவும், சிலவேளைகளில் படைப்பலத்தை பிரயோகித்ததாகவும் அரச சார்பற்ற அமைப்புகளும் ஊடகங்களும் சுமத்தும் குற்றச்சாட்டுகளை கிறீஸ் அரசாங்கம் நிராகரித்து வருகிறது.
கடந்த மாதம் ஐ.நாவில் உரையாற்றிய துருக்கிய ஜனாதிபதி தாயீப் ஏர்தோகான், குடியேற்வாசிகள் தொடர்டபான ஒடுக்குமுறை கொள்கையின் மூலம் ஏஜியன் கடலை மயானாமாக கிறீஸ் மாற்றுவதாக குறு;றம் சுமத்தினார்.
ஜேர்மனியின் பேர்லின் நகரை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் அமைப்பான மேரே லிபேரம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், எவ்ரோஜ் பிராந்தியத்தில் துருக்கி மற்றும் கிறீஸினால் மனித உரிமைகள் குற்றங்கள் நாளாந்த அடிப்படையில் இழைக்கப்படுகின்றன.
இக்குற்றங்கள் அரசாங்கங்களினால் பகிரங்கமாக கலந்துரையாடப்படும்போது, அது துருக்கிக்கும் கிறீஸுக்கும் இடையிலான நீண்ட கால பிரச்சினையில் எண்ணெய் ஊற்றுவதாக பயன்படுத்தப்படுகிறது, இடம்பெயரும் மக்களை பாதுகாப்பதற்கு அல்ல' எனக் குறிப்பிட்டிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM