ஐ.சி.சி. இ - 20 உலகக் கிண்ணம் : பி குழுவில் இரண்டு முக்கிய போட்டிகள்

Published By: Digital Desk 5

19 Oct, 2022 | 10:13 AM
image

(என்.வீ.ஏ.)

அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் 8ஆவது ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் பி குழுவுக்கான இரண்டு முக்கிய முதல் சுற்று போட்டிகள் நடைபெறவுள்ளன.

இரண்டு தடவைகள் சம்பியனான மேற்கிந்தியத் தீவுகளை அதிரவைத்து தனது ஆரம்பப் போட்டியில் வெற்றியீட்டிய ஸ்கொட்லாந்து, இரண்டாவது வெற்றிக்கு குறிவைத்து அயர்லாந்தை இன்று எதிர்த்தாடவுள்ளது.

இப் போட்டி ஹோபார்ட் பெலேரிவ் ஓவல் விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இன்று காலை 9.20 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் 2008இலிருந்து 2019வரை நடைபெற்ற 13 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் 7 - 3 என்ற ஆட்டங்கள் அடிப்படையில் அயர்லாந்து முன்னிலையில் இருக்கிறது. ஒரு போட்டி சமநிலையில் முடிவடைந்ததுடன் 2 போட்டிகளில் முடிவு கிட்டவில்லை.

எனினும் கடந்த கால போட்டி முடிவுகளை வைத்து இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என அனுமானிக்க முடியாது.

அயர்லாந்து தனது ஆரம்பப் போட்டியில் ஸிம்பாப்வேயிடம் தோல்வி அடைந்தபோதிலும் இன்றைய போட்டியில் வெற்றியீட்ட கடுமையாக முயற்சிக்கவுள்ளது.

எனவே அயர்லாந்தும் ஸ்கொட்லாந்தும் மோதும் இன்றைய போட்டி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

அயர்லாந்து அணியில் போல் ஸ்டேர்லிங், கேர்ட்டிஸ் கெம்ஃபர், ஜோர்ஜ் டொக்ரெல் ஆகியோரும் ஸ்கொட்லாந்து அணியில் மெட் வொட், ரிச்சி பெறிங்டன், ஜோர்ஜ் முன்சி ஆகியோரும் பிரதான வீரர்களாக இடம்பெறுகின்றனர்.

SCO vs IRE Dream11 Prediction, Fantasy Cricket Tips, Dream11 Team, Playing  XI, Pitch Report And Weather Updates – Scotland vs Ireland Match 7, Group  B, ICC T20 World Cup 2022

அணிகள்

Scotland: George Munsey, Michael Jones, Michael Cross, Richie Berrington, Calum MacLeod, Michael Leask, Chris Greaves, Matt Watt, Josh Davey, Safyaan Sharif, Brad Wheal

Ireland: Paul Stirling, Andy Balbirnie, Lorcan Tucker, Harry Tector, Curtis Campher, George Dockrell, Gareth Delany, Mark Adair, Simi Singh, Barry McCarthy, Josh Little

மேற்கிந்தியத் தீவுகள் எதிர் ஸிம்பாப்வே

மேற்கிந்தியத் தீவுகளுக்கும் ஸிம்பாப்வேக்கும் இடையிலான போட்டி இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.

தனது ஆரம்பப் போட்டியில் ஸ்கொட்லாந்திடம் எதிர்;பாராதவிதமாக தோல்வி அடைந்து மேற்கிந்தியத் தீவுகள் முதலாவது வெற்றிக்கு குறிவைத்து விளையாடவுள்ளது. ஆனால், சிறப்பாக விளையாடிவரும் ஸிம்பாப்வே இந்தப் போட்டியை இலகுவில் நழுவ விடப்போவதில்லை.

இந்த இரண்டு அணிகளும் 2013க்குப் பின்னர் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் சந்திப்பது இதுவே முதல் தடவையாகும். 2010க்கும் 2013க்கும் இடைப்பட்ட காலத்தில் இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற 3 போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் 2 - 1 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

எனினும் இன்றைய போட்டியில் எந்த அணி சகலதுறைகளிலும் பிரகாசிக்கின்றது அந்த அணிக்கே வெற்றிகிட்டவுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணியில் நிக்கலஸ் பூரண் (தலைவர்), ஜேசன் ஹோல்டர், கய்ல் மேயர்ஸ், எவின் லூயிஸ் ஆகியோரும், ஸிம்பாப்வே அணியில் சிக்கந்தர் ராஸா, க்ரெய்க் ஏர்வின் (தலைவர்), சோன் வில்லியம்ஸ், ரெஜிஸ் சக்கப்வா ஆகியோரும் பிரதான வீரர்களாக இடம்பெறுகின்றனர்.

WI vs ZIM Dream11 Prediction, Fantasy Cricket Tips, Dream11 Team, Playing  XI, Pitch Report And Weather Updates – West Indies vs Zimbabwe Match 8,  Group B, ICC T20 World Cup 2022

அணிகள்

West Indies: Kyle Mayers, Evin Lewis, Johnson Charles, Shamarh Brooks, Nicholas Pooran (c & wk), Rovman Powell, Jason Holder, Odean Smith, Akeal Hosein, Alzarri Joseph, Sheldon Cottrell

Zimbabwe: Regis Chakabva, Craig Ervine (c), Wesley Madhevere, Sean Williams, Sikandar Raza, Milton Shumba, Ryan Burl, Luke Jongwe, Tendai Chatara, Richard Ngarava, Blessing Muzarabani

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தரங்க, டில்ஷான் துடுப்பாட்டத்தில் அசத்தல் :...

2023-03-21 17:16:15
news-image

பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக...

2023-03-21 14:58:47
news-image

WPL: டெல்ஹியிடம் பணிந்தது மும்பை

2023-03-21 12:53:50
news-image

WPL: குஜராத்தை வென்று ப்ளே ஓவ்...

2023-03-21 11:50:19
news-image

ராஜஸ்தான் செல்லும் வியாஸ்காந்த்

2023-03-21 09:47:45
news-image

19இன் கீழ் மும்முனை ஒருநாள் கிரிக்கெட்...

2023-03-21 09:18:28
news-image

மரித்துப்போன கால்பந்தாட்டத்திற்கு உயிர் கொடுக்க நண்பர்களாக...

2023-03-20 20:53:51
news-image

லெஜென்ட்ஸ் லீக் இறுதிப் போட்டியில் ஏசியா...

2023-03-20 15:14:33
news-image

சிட்டி லீக் 1ஆம் பிரிவு :...

2023-03-20 13:39:27
news-image

டெஸ்ட் அணியின் தலைமை பொறுப்பிலிருந்து விலகுகின்றார்...

2023-03-20 16:12:31
news-image

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகள்...

2023-03-20 13:26:54
news-image

இலங்கையை இன்னிங்ஸால் வீழ்த்திய நியூஸிலாந்து டெஸ்ட்...

2023-03-20 12:09:34