(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
மலையக பெருந்ததோட்டங்களில் பல்வேறு காரணங்களினால் மரணிக்கும் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் எந்தவித நட்டஈடு வழங்காமல் பெருந்தோட்ட மக்களை கம்பனிகளுக்கு வழங்கிவிட்டு அரசாங்கம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றது.
அதனால் சிறுதோட்ட உரிமையாளருக்கு வழங்கப்பட்டிருக்கும் காணி உரிமையை பெருந்தோட்ட மக்களுக்கும் வழங்கி அவர்களின் தனித்துவத்தை அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்ற பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
மலையக மக்களின் வாழ்கையை அரசாங்கம் இன்று பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு வழங்கிவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றது. பெருந்தோட்ட கம்பனிகளின் மோசடி காரணமாக அந்த மக்கள் இன்று சாய்ந்து மடிந்து வருகின்றனர்.
பசறை கனவரன் தோட்டத்தில் 2வாரங்களுக்கு முன்னர் மின்சாரம் தாக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். குளவி கொட்டுக்குள்ளாகி கடந்த வருடம் 127பேர் உயிரிழந்துள்ளனர். அதேபாேன்று பாம்பு, சிறுத்தை உட்பட பல்வேறு விஷ ஜந்துக்களின் தாக்கத்தினால் தாேட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இனவாம் காரணமாக எமது மக்களுக்கு தேயிலை தோட்டங்களில் காணிகள் பிரித்து வழங்காமல் தேயிலை காணிகள் காடாகி இருக்கின்றது. அதனால் காட்டில் வாழும் மிருகங்கள் தோட்டங்களுக்குள் வந்து, மக்களின் உயிருக்கு ஆபத்தாகி இருக்கின்றது.
அத்துடன் பெருந்தோட்டங்களில் மின் ஒழுக்கு, குளவிகொத்து, மற்றும் வேறு காரணங்களால் உயிரிழந்திருக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கும் நட்டஈடு என்ன என கேட்கின்றோம்.
தோட்டங்களில் சிறுத்தைகளை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றதே தவிர, சிறுத்தைகளில் இருந்து தோட்ட மக்களை பாதுகாக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதில்லை.
மேலும் 200வருடங்களாக வாழும் பெருந்தோட்ட மக்கள் இன்னும் லயன் அறைகளிலேயே இருக்கின்றனர். இனவாதம் காரணமாகவவே சிறுதோட்ட உரிமையாளர்களுக்கு காணி உரிமை வழங்கப்பட்டும் பெருந்தோட்ட மக்களுக்கு அதனை வழங்காமல் இருக்கின்றுது. அதனால் 200வருடாக வாழும் பெருந்தோட்ட மக்களுக்கு நில உரிமையை வழங்கி அந்த மக்களின் தனித்துவத்தை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM