விரைவில் மக்கள் போராட்டம் கலவரமாக தோற்றம் பெறும் - சம்பிக்க எச்சரிக்கை !

Published By: Digital Desk 5

18 Oct, 2022 | 05:21 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம் வசீம்)

எரிபொருள், எரிவாயு மற்றும் மின் விநியோகம் தொடர்பில் மக்கள் போராட்டம் தற்போது தணிந்துள்ளதே தவிர நிறைவு பெறவில்லை.

வெகுவிரைவில் மக்கள் போராட்டம் கலவரமாக தோற்றம் பெறும்.வலுசக்தி துறையை தனியார் மயப்படுத்துவது எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை தோற்றுவிக்கும் என  பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18)  பெற்றோலிய உற்பத்தி பொருட்கள் விசேட ஏற்பாடுகள் (திருத்தம்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

திட்டமிட்ட வகையில் வலுசக்தி துறை நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.எரிபொருள் இறக்குமதி மற்றும் விநியோகத்தில் வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் இச்சட்டமூலம் இயற்றப்படுவதை கறும் புள்ளியாக குறிப்பிட வேண்டும்.

தேசிய வளங்களை பாதுகாப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆட்சிக்கு வந்தது.ஆனால் தற்போது நெருக்கடியினை முன்னிலைப்படுத்தி நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு முற்றிலும் விரோதமாக செயற்படுகிறது.

எரிபொருள்,எரிவாயு மற்றும் மின்விநியோக கட்டமைப்பு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது,ஆகவே நாட்டில் தற்போது எந்த பிரச்சனையும் இல்லை என ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் குறிப்பிடுவது அவதானிக்கத்தக்கது.மக்கள் போராட்டம் முடிவடையவில்லை.சற்று தணிவடைந்துள்ளது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

எரிபொருள் மற்றும் எரிவாயு மற்றும் மின்சார கட்டமைப்பு வழமைக்கு திரும்பவில்லை.நாட்டு மக்களின் பாவனை குறைந்துள்ளது என்பதே உண்மை எரிபொருள் பாவனை 50 சதவீதத்தினாலும்,எரிவாயுவின் பாவனை 40 சதவீதத்தினாலும் மற்றும் மின் பாவனை 20 சதவீதத்தினாலும் குறைவடைந்துள்ளது.இதனால் பொருளாதார வளர்ச்சி வீதம் 10 வீதத்தால் குறைவடைந்துள்ளது.

நாட்டு மக்கள் தமது அத்தியாவசிய தேவைகளை குறைத்துக் கொண்டு நெருக்கடிக்குள்ளாகி உள்ளார்கள்.மக்கள் போராட்டம் முடிவடையவில்லை.வெகுவிரைவில் மக்கள் போராட்டம் கலவரமாக தோற்றம் பெறும்.

நாட்டின் ஒருமாத இறக்குமதி செலவு 1900 மில்லியனாக காணப்பட்ட போது தற்போது அந்த தொகை 1600 மில்லியனாக குறைக்கப்பட்டுள்ளமு.மறுபுறம் மாதாந்தம் செலுத்தும் 600 மில்லியன் டொலர் அரசமுறை கடன் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

வங்குரோத்து நிலை அடைந்து விட்டோம்,ஆகவே பெற்றுக்கொண்ட அரசமுறை கடன்களை மீள செலுத்த முடியாது என அறிவித்துள்ளதால் எதிர்காலங்களில் எந்த நாடும்,எந்த நிதி நிறுவனமும் இலங்கைக்கு கடன் வழங்க முன்வராது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31