(அப்துல் கையூம்)

மட்டக்களப்பு செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள வந்தாறுமூலையில் தாய்ப்பால் புரைக்கேறியதால் 3 நாட்களேயான குழந்தை நேற்று மரணித்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

வந்தாறுமூலை, ஆலையடி வீதியைச் சேர்ந்த தவசீலன் மற்றும் சுஜாந்தினி தம்பதிகளின் ஆண் குழந்தை ஜரூக்ஸன் (வயது 3 நாள்) என்ற குழந்தையே இவ்வாறு மரணத்தைத் தழுவியுள்ளது.

குழந்தை அழும்போது தாய் பால் அருந்தக் கொடுத்து பிள்ளையை படுக்கையில் போட்டுவிட்டு வீட்டு வேலைகள் முடிந்து வந்து பார்த்தபோது சற்று நேரத்தில் குழந்தை மரணித்து விட்டிருந்ததாக பெற்றோர் தெரிவித்தனர்.

கரடியனாறு பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கே. சுகுமார் முன்னிலையில் பிரேத பரிசோதனையின் இடம்பெற்ற பின்னர் குழந்தையின் சடலம்  நல்லடக்கத்திற்காக பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.