எரிபொருள் இறக்குமதி, விநியோகத்துக்கு சர்வதேச நிறுவனங்களுக்கு அனுமதி - அமைச்சர் காஞ்சன

By Vishnu

18 Oct, 2022 | 05:25 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம் வசீம்)

பெற்றோலிய துறைசார் நிறுவனங்களுடன் தற்போது சேவையாற்றாத ஆனந்த பாலித,அசோக ரன்வெல ஆகியோர் தான் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுப்படுகிறார்கள்.

வாழ்நாள் முழுவதிலும் போராடுவதை இலக்காக கொண்டுள்ளார்கள். எரிபொருள் இறக்குமதி மற்றும் விநியோகத்துக்கு சர்வதேச நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என வலுசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) பெற்றோலிய உற்பத்தி பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) திருத்தச் சட்டமூலத்தை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

2002ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பெற்றோலிய உற்பத்தி பொருட்கள் சட்ட மூலத்தை தற்போது திருத்தம் செய்யவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.

இச்சட்டத்தின்  ஒரு பிரிவு மாத்திரம் திருத்தம் செய்ய விசேட சட்டமூலம் சமர்பிக்கப்பட்டது. இச்சட்டத்தின் ஊடாக இரண்டு பிரதான நிறுவனங்களுக்கு எரிபொருளை இறக்குமதி செய்யவும், விநியோகிக்கவும் அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 85 சதவீத எரிபொருள் விநியோகத்தையும்,லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் 15 சதவீத எரிபொருள் விநியோகத்தையும் முன்னெடுக்கிறது.

தற்போதைய நிலையில் எரிபொருள் பாவனைக்கான கேள்வி அதிகரித்துள்ளது,ஆகவே மூன்றாம் தரப்பினருக்கு எரிபொருள் இறக்குமதி மற்றும் விநியோகத்துக்கு அனுமதி வழங்க  வேண்டியுள்ளது.

பெற்றோலிய உற்பத்தி பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் திருத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து மூன்றாவது தரப்பினரான வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எரிபொருள் இறக்குமதி மற்றும் விநியோகத்துக்கு அனுமதி வழங்கப்படும்.இச்சட்ட மூலத்துக்கு எதிராக தொழிற்சங்கத்தினர் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்படுகிறார்கள்.

தொழிற்சங்கத்தினரான அசோக ரன்வெல,ஆனந்த பாலித ஆகியோர் தற்போது சேவையில் இல்லை.இவர்கள் ஏதாவதொரு விடயத்தை பிடித்துக் கொண்டு வாழ்நாள் முழுவதும் போராட்டத்தில் ஈடுப்படுகிறார்கள்.போராட்டத்திற்கு அஞ்ச போவதில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் முடிவடைந்து 21 நாட்களுக்குள் வேட்பாளர்கள்...

2023-02-02 15:05:15
news-image

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தக்...

2023-02-02 16:08:53
news-image

அரச செலவுகளை 6 வீதத்தால் குறைப்பதற்கான...

2023-02-02 15:27:21
news-image

விமல், டலஸ், பீரிஸ் அணியினருக்கு எதிராக...

2023-02-02 12:49:22
news-image

தேர்தல் செலவுகளுக்கு கட்டுப்பணம் பயன்படுத்தப்படுகிறதா ?...

2023-02-02 15:25:08
news-image

இலங்கை வருகிறார் நேபாள வெளிவிவகார அமைச்சர்

2023-02-02 15:42:37
news-image

காணாமல்போன வெல்லம்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் நிர்வாணத்துடன்...

2023-02-02 17:03:36
news-image

26 உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் பொலிஸ்...

2023-02-02 16:23:13
news-image

கட்சிக்குள் பிளவை ஏற்படுத்துவோர் மக்களையும் பிளவுபடுத்தி...

2023-02-02 16:59:48
news-image

கம்பளை - நாவலப்பிட்டி பிரதான வீதியில்...

2023-02-02 16:57:03
news-image

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு...

2023-02-02 15:34:04
news-image

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தாலுக்கு அழைப்பு

2023-02-02 16:53:42