கொழும்பு - கண்டி பிரதான வீதியில் நெலும்தெனிய பகுதியல்  இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 3 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

டிப்பர் வண்டியும் வேன் ஒன்றும் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.