நடிகை பிரியாமணியின் 'Dr. 56' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published By: Vishnu

18 Oct, 2022 | 12:35 PM
image

நடிகை பிரியாமணி கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'Dr 56' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இயக்குநர் ராஜேஷ் ஆனந்த்லீலா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'Dr 56'. இதில் நடிகை பிரியாமணி கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.

இவருடன் நடிகர்கள் தீபக், பிரவீண் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதையை எழுதி படத்தை தயாரித்திருக்கிறார் டி பிரவீன் ரெட்டி. படத்திற்கு பாடல்களை எழுதியதுடன் வசனங்களையும் எழுதி இருக்கிறார் ஷங்கர் ராமன்.

ராகேஷ் சி. திலக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நோபின் பால் இசையமைத்திருக்கிறார். சஸ்பென்ஸ் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஹரிஹரா பிக்சர்ஸ் மற்றும் ஸ்ரீ லட்சுமி ஜோதி கிரியேசன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் டொக்டர் ஏ. பி. நந்தினி மற்றும் ஏ. என். பாலாஜி ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.

கன்னடத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஏனைய தென்னிந்திய மொழிகளிலும் வெளியாகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

பிரியாமணியின் அர்த்தமுள்ள தோற்றம், அவரின் பின்னணியில் இடம்பெற்றிருக்கும் பத்திரிக்கை செய்திகள், 'Dr 56' என்பது 'டாக்டர் 56' என்ற பொருள் தரும் வகையிலான வடிவமைப்பு, அதனுடன் 1956 முதல் 2019 என குறிப்பிடப்பட்டிருப்பதால், இந்த காலகட்டத்திற்குள் நிகழ்ந்த சம்பவங்களை இந்த படம் பேசுகிறது என உணர்த்தப்பட்டிருப்பதாலும் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'விடுதலை' பட நாயகி பவானி ஸ்ரீ...

2025-01-22 17:02:31
news-image

இயக்குநர் இமயம் பாரதிராஜா நடிக்கும் '...

2025-01-21 15:48:35
news-image

புதுமுக நடிகர் ஹரி பாஸ்கர் நடிக்கும்...

2025-01-21 15:48:01
news-image

சந்தானம் நடிக்கும் 'தில்லுக்கு துட்டு நெக்ஸ்ட்...

2025-01-21 15:47:45
news-image

குரு சோமசுந்தரம் நடிக்கும் ' பாட்டல்...

2025-01-20 17:43:05
news-image

இயக்குநராகவும் வெற்றி பெற்ற நடிகை தேவயானி

2025-01-20 17:12:25
news-image

மணிகண்டன் நடிக்கும் 'குடும்பஸ்தன்' படத்தின் முன்னோட்டம்...

2025-01-20 17:12:09
news-image

வாரிசு அரசியலை பகடியாக பேசும் 'குழந்தைகள்...

2025-01-20 17:11:25
news-image

சிவ பக்தரின் புராண சரித்திரத்தை பேசும்...

2025-01-20 16:48:03
news-image

அஜித் குமார் நடிக்கும் 'விடாமுயற்சி' படத்தின்...

2025-01-20 16:26:33
news-image

நடிகை சோனியா அகர்வால் நடிக்கும் 'WILL'...

2025-01-18 16:13:54
news-image

நடிகை ரூபா நடிக்கும் 'எமகாதகி '...

2025-01-18 16:13:40