மின்சாரக் கட்டணம் திருத்தம் செய்யப்பட்டதன் பின் மாதாந்தம் 15 பில்லியன் மேலதிக வருமானம் - காஞ்சன

Published By: Digital Desk 5

18 Oct, 2022 | 12:27 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம் வசீம்)

மின் சக்தி மற்றும் வலு சக்தி துறை அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் மின்சார சபை வங்குரோத்து நிலை அடையவில்லை. வங்குரோத்து அடைந்த அமைச்சினையே பொறுப்பேற்றுள்ளேன்.

மின்சக்தி துறை தொடர்பான மறுசீரமைப்பு குழு இவ்வார இறுதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி எழுப்பிய மேலதிக கேள்விக்கு பதிலளித்தார்.

மின்சார கட்டணம் திருத்தம் செய்யப்பட்டதன் பின்னர் மாதாந்தம் மேலதிகமாக 15 பில்லியன் வருமானம் கிடைக்கப் பெற்றாலும்,152 பில்லியன் நட்டத்தை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற அமர்வு செவ்வாய்க்கிழமை (18) பாராளுமன்ற அமர்வு கூடிய வேளை வாய்மூல விடைக்கான வினாக்களின் போது எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.தர்மசேன முன்வைத்த கேள்விக்கு வருமாறு பதிலளித்தார்

உலக சந்தையில் எரிபொருள் மற்றும் எரிபொருள் விலையேற்றம்,மின்சார உற்பத்திக்கான கேள்வி மற்றும் செலவு அதிகரித்தல் ஆகிய காரணிகளினால் இலங்கை மின்சார சபையின் நட்டம் தீவிரமடைந்துள்ளது.மின்சார சபையின் நட்டத்தை முகாமைத்துவம் செய்யும் வகையில் இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதியுடன் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்கட்டணம் திருத்தம் செய்யப்பட்டது.

 மின்சார கட்டணம் திருத்தம் செய்யப்பட்டதன் பின்னர் இலங்கை மின்சார சபை 15 பில்லியன் மேலதிக வருமானத்தை பெற்றாலும்,மாதாந்தம் 152 பில்லியன் நட்டத்தை எதிர்கொண்டுள்ளது.உலக சந்தையில் எரிபொருள் மற்றும் நிலக்கரி அதிகரிப்பினால் மின்சார சபை நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

முன் மின்சார சபையை மறுசீரமைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த ஆகஸ்ட் மாதம் 16ஆம் திகதி அமைச்சரவையின் அங்கிகாரத்துக்கமைய மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் தலைமையில் ஆர்.எஸ்.அமரசிங்க,நிஹால் ஜயவர்தன,எம்.எம்.பெர்டினான்டோ,திலால் விஜயசிங்க,சுதந்த பெரேரா,சாலிய விக்கிரமசிங்க,ஹர்ஸ பிரனாந்து ஆகியோரை உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.இக்குழுவினர் இவ்வார இறுதிக்குள் அறிக்கை சமர்ப்பிப்பார்கள். மறுசீரமைப்பு குழுவின் அறிக்கை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டவுடன், அது பாராளுமன்றத்துக்கும் சமர்ப்பிக்கப்படும் என்றார்.

இதன்போது எழுந்து கருத்துரைத்த எச்.எம். தர்மசேன தனது முதலாவது மேலதிக கேள்வியை பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறிக்கும்,இரண்டாவது கேள்வியை பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மானுக்கும் வழங்குதாகவும் குறிப்பிட்டார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சமிந்த விஜேயசிறி  மின்சாரத்துறையின் நட்டத்தினால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது.வலுசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சரவை நாட்டு மக்கள் வங்குரோத்து அமைச்சர் என்று குறிப்பிடுகிறார்கள்.

மின்சார சபையை மறுசீரமைப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் உறுப்பினர் நியமனம் தொடர்பில் சிக்கல் நிலை காணப்படுகிறது, ஆகவே அறிக்கை எப்போது சமர்ப்பிக்கப்படும் என வலுசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

 இதன்போது பதிலளித்த வலுசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் நான் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் மின்சார சபை வங்குரோத்து நிலை அடையவில்லை.வங்குரோத்து நிலை அடைந்த அமைச்சினை பொறுப்பேற்றுள்ளேன் என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

 அங்கிகரிக்கப்பட்ட துறைசார் நிபுணர்களை உள்ளடக்கியதாக மின்சார சபை மறுசீரமைப்புக்கான குழு நியமிக்கப்பட்டுள்ளது.குழுவின் அறிக்கையில் என்ன விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பதை தற்போது குறிப்பிட முடியாது.குழுவினர் இவ்வாரத்தின் இறுதிக்குள் அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.அறிக்கை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31