முச்சக்கரவண்டிகளுக்கு மேலதிக எரிபொருள் ஒதுக்கீடு !

Published By: T. Saranya

18 Oct, 2022 | 11:43 AM
image

முச்சக்கரவண்டிகளுக்கு மேலதி எரிபொருள் ஒதுக்கீடு வழங்கப்படவுள்ளதாக வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் இரு வாரங்களின் பின்னர் மேலதிக ஒதுக்கீட்டை முச்சக்கரவண்டிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், சுய தொழிலில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகளுக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டுமெனவும்  இந்த நடவடிக்கையில் தாமதம் ஏற்படுவதற்கான காரணத்தையும் இன்றைய சபை அமர்வின் போது வினவியுள்ளார்.

இதற்கு பதிலளித்த வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர,  நீண்டகாலமாக தொழில் ரீதியாக முச்சக்கரவண்டி செலுத்துபவர்களை வகைப்படுத்துவதற்கு சில நாட்கள் தேவைப்படுகிறது. கிடைக்கப்பெற்ற தகவல்களை சரிபார்த்து ஒதுக்கீட்டை அதிகரிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள குறைந்தது இருவாரங்களாவது தேவைப்படும். 

அதன் பின்னர் அவர்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நவம்பர் 18 இன் பின்னர் தேர்தல்...

2023-03-21 17:21:57
news-image

காணாமலாக்கப்படுதலுக்கு இலங்கைக்கு முதல் பரிசை வழங்க...

2023-03-21 17:33:38
news-image

சுதந்திர ஊடக செயற்பாட்டை சவாலுக்குட்படுத்த வேண்டாம்...

2023-03-21 19:50:58
news-image

அரசாங்கம் மக்கள் மீதான அடக்குமுறைகளை முன்னெடுக்க...

2023-03-21 19:54:32
news-image

இலங்கையில் கடந்த ஆண்டு குறிப்பிடத்தக்களவு மனித...

2023-03-21 19:52:01
news-image

கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்துவதில் இலங்கை முன்னேற்றத்தைக்...

2023-03-21 16:51:25
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் என்ன...

2023-03-21 17:05:42
news-image

கடன்களின் ஸ்திரத்தன்மை வெகுவிரைவில் உறுதிப்படுத்தப்படும் -...

2023-03-21 17:31:42
news-image

செய்தியில் பொய்யை மாத்திரம் சமூகமயப்படுத்தும் ஊடகங்களுக்கு...

2023-03-21 17:13:08
news-image

இலங்கை குறித்த சர்வதேச நாணய நிதியத்தின்...

2023-03-21 17:25:01
news-image

ஹஜ் யாத்திரைக்கான ஏற்பாடுகள் நேர்மையாக முன்னெடுக்கப்படும்...

2023-03-21 19:55:55
news-image

330 மில்லியன் டொலர் முதலாம் கட்ட...

2023-03-21 16:50:04