நீர் வீணாகுவதைத் தவிர்க்கும் கழிவறைத் தொட்டி

Published By: Vishnu

18 Oct, 2022 | 12:11 PM
image

பூகோள வெப்பமடைதலும், ஏனைய செயற்பாடுகளும் காலநிலை மாற்றங்களை அதிகரிக்கும் நிலையில், நிலையான வாழ்க்கையுடன் வளங்களை பாதுகாப்பது தொடர்பில் உலகம் கவனம் செலுத்துகிறது.

இதற்காக பல்வேறு நவீன கண்டுபிடிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பல்வேறு புதிய உபாயங்களும் வகுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நீர் விரயமாகுவதை தவிர்ப்பதற்காக நவீன கழிவறைத் தொட்டியொன்று ஜப்பானில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கழிவறைத் தொட்டியில் இணைந்த நீர் தாங்கியானது நீரை வழிந்தோடச் செய்யும் 'சிங்க்' போன்று  வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாம் கைகளை கழுவும்போது வழிந்தோடும் நீர், இந்த சிங்க் ஊடாக கழிவறைத் தொட்டியின் தாங்கியில் சேமிக்கப்படும்.

இது தொடர்பான படம் டுவிட்டரில் வெளியிடப்பட்டதையடுத்து, 1.12 லட்சத்துக்கு அதிகமானோர் இதை லைக் செய்துள்ளதுடன், 12,000 இற்கு அதிகமானோர் இதை பகிர்ந்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்