பள்ளி செல்லும் குழந்தைகளிடையே கிட்டப்பார்வைக் குறைபாடு சமீபகாலமாக அதிகரித்து வருவதாக இந்தியா, சீனா, ஐரோப்பா போன்ற நாடுகளில் நடைபெற்ற ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஸ்மார்ட்போன், தொலைக்காட்சி, கணினியை பார்த்து கொண்டிருப்பதுதான் இந்த நிலைமைக்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.
பெரும்பாலான குழந்தைகள் எந்நேரமும் ஸ்மார்ட்போனும் கையுமாக இருக்கிறார்கள். இல்லையென்றால் கணினி, தொலைக்காட்சி முன் மணிக்கணக்கில் அமர்ந்திருக்கிறார்கள்.
நம் முந்தைய தலைமுறையில் குழந்தைகள், இந்த அளவுக்குக் கண்ணாடி போடவில்லை. கிட்டப்பார்வைக் குறைபாடு ஏற்படுவதற்கு இன்னுமொரு முக்கியக் காரணமாக ஆய்வு சுட்டிக்காட்டுவதைக் கவனிக்க வேண்டும்.
வீட்டுக்கு வெளியில் குழந்தைகள் விளையாடும் போது, கண்ணின் விழித்திரையில் ‘டோபமைன்’ என்ற வேதிப்பொருளை அதிகமாக சுரக்கச் செய்கிறது சூரிய ஒளி.
அதன்மூலம் விழிக்கோளம் நீட்சி அடைவது தடுக்கப்படுகிறது என்றும் சொல்கிறார்கள். சூரிய ஒளியில் உள்ள விட்டமின் ‘டி’ கண்களை சுற்றியுள்ள தசைகளிலுள்ள திசுக்கள் நன்றாக வேலை செய்வதற்கும், விழித்திரையில் பிம்பம் தெளிவாக விழுவதற்கும், விழிக்கோளத்தின் இயல்பான வளர்ச்சிக்கும் வடிவத்துக்கும் கூட காரணமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அந்த காலத்தில் குழந்தைகள் நேரம் கிடைக்கும் போதெல்லாம், வீட்டுக்கு வெளியேதானே விளையாடினார்கள். விடுமுறை என்றால் சொல்லவே வேண்டாம், வீட்டுக்கே வர மாட்டார்கள். அதனால் அவர்களுடைய கண் பாதுகாக்கப்பட்டது.
ஆனால், இப்போது அதற்கு நேரெதிராகச் செயல்படுவதுதான் பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம். கண் பாதுகாப்பு குறித்து குழந்தைகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.
குழந்தைகளின் கையில் அலைபேசியைக் கொடுப்பதை கட்டுப்படுத்த வேண்டும். சமூக வலைத்தளங்களைத் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இணையம் சார்ந்த அனைத்துத் தேவைகளுக்கும் கணினியையே பயன்படுத்த வேண்டும்.
ஏற்கெனவே கிட்டப்பார்வைக் குறைபாட்டைக் கொண்டவர்களுக்குப் பவர் அதிகரிக்கும்போது, பார்வையைப் பாதிக்கும் தீவிரப் பிரச்சினைகள் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் குழந்தைகளை வீட்டுக்கு வெளியில் விளையாடச் செய்ய வேண்டும்.
இதன்மூலம் பார்வைக் குறைபாடு ஏற்படாமல் தடுக்க முடியும். ஏற்கெனவே, கிட்டப் பார்வைக்கு கண்ணாடி அணிந்திருப்பவர்களும் வீட்டுக்கு வெளியில் அதிக நேரம் விளையாடுவதன்மூலம் கண்ணாடி பவர் அதிகரிப்பது தடுக்கப்படுவதுடன், கூடுதல் பாதிப்பு ஏற்படாமலும் தடுக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM