தேசிய வருமான வரி அதிகரிப்பின் மூலம் சாதாரண மக்களுக்கு பாதிப்பு இல்லை - ஐக்கிய தேசியக் கட்சி

By Digital Desk 5

17 Oct, 2022 | 04:49 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

தேசிய வருமான வரி அதிகரிப்பின் மூலம் நாட்டில் நூற்றுக்கு 5வீதமானவர்களுக்கே தாக்கம் ஏற்படும். அதனால் மத்திய வரிசை மக்களை பாதுகாத்துக்கொண்டு நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி உட்பட அரசாங்கம் எடுத்திருக்கும் இந்த நடவடிக்கையை யாரும் அரசியலாக்க வேண்டாம் என ஐக்கிய தேசிய கட்சி  கோட்டே தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி தினேஷ் விதான பத்திரண தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

தேசிய வருமான வரி திருத்தச்சட்டமூலத்தின் ஊடாக வெளிப்படையான வரியை அதிகரித்து நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

அதன் பிரகாரம் மாத வருமானமாக ஒருஇலட்சம் ரூபா முதல் அதற்கு அதிகமாக பெறுபவர்களிடமிருந்து நூற்றுக்கு 6 முதல் 36 வீதம் வரை பல்வேறு நிபந்தனைகளுக்கு கீழ் வரி அறவிடுவதற்கே அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.  என்றாலும் இந்த வரி அதிகரிப்புக்கு எதிராக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

அத்துடன் நாட்டில் தற்போது வருடாந்த வரி வருமானம் 1398 மில்லியன் ரூபாவாகும். இதில் 80வீதம் வரை மறைமுக வரி ஊடாகவே அறவிடப்படுகின்றது.

அத்தியாவசிய ஒரு பொருளுக்கு வரி அதிகரித்தால் அதன் சுமையை நாட்டில் அனைத்து தரப்பினரும் சுமக்கவேண்டி ஏற்படுகின்றது.

அதனால் மறைமுக வரி அதிகரிக்கப்படுவதை அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததுடன் நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்கு வெளிப்படையான வரியை அதிகரிக்கவேண்டும் எனவும் தெரிவித்து வந்திருக்கின்றன.

அதன் பிரகாரம் தற்போது வருமான வரி அதிகரிப்பதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கை மூலம் நாட்டில் 95வீதமானவர்கள் இந்த வரிக்குள் உள்வாங்கப்படுவதில்லை.

அத்துடன் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண வரி முக்கியமாகும். அதனால் மத்திய தரப்பினர் பாதிக்காதவகையில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் வருமான வரி அதிகரிப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

ஏனெனில் இலங்கை வெளிநாட்டு கடன் மற்றும் வட்டி தவணையின் பிரகாரம் 2022இல் இருந்து 2026ஆம் ஆண்டுவரை 26மில்லியன் டொலர் செலுத்தவேண்டி இருக்கின்றது.

நாட்டின் வருமானத்தை அதிகரிக்காமல் கடன் செலுத்தவும் நிவாரணங்களை வழங்கவும் முடியாத காரியம். அதனால்தான் அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கின்றது.

எனவே நாட்டின் வருமானத்தை அதிகரிக்காமல் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது. தேசிய வருமான வரி அதிகரிப்பின் மூலம் 5வீதமான மக்களுக்கே  அதன் தாக்கம் ஏற்படும். 

அதனால் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை அரசியலாக்காமல் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி சுதந்திரதினத்தன்று யாழிலிருந்து...

2023-01-28 11:38:21
news-image

3 இந்திய மீன்பிடிப் படகுகள் அரசுடமையாக்கப்பட்டன

2023-01-28 11:21:37
news-image

வாழைச்சேனையில் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக கண்டன...

2023-01-28 11:38:57
news-image

பாதுகாப்பு, செழிப்பினை தொடர்ந்தும் முன்னேற்ற நாங்கள்...

2023-01-28 11:07:07
news-image

மீற்றர் வட்டி விவகாரம் ; மேலும்...

2023-01-28 11:00:53
news-image

தேர்தல் முடியும்வரை புதிய ஆணைக்குழு அமைப்பதை...

2023-01-28 10:49:46
news-image

சகோதரனுக்காக நாட்டின் அரசியலமைப்பை மாற்றிய உலகில்...

2023-01-28 10:55:50
news-image

இக்கட்டான நிலைமையில் ஒத்துழைப்பு வழங்கிய இந்திய...

2023-01-28 10:26:02
news-image

யாழில் மூன்று தேர்தல் வன்முறைச் சம்பவங்கள்...

2023-01-28 09:49:28
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது தேர்தல்...

2023-01-28 09:41:35
news-image

ஜனாதிபதி ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு மக்களாணை...

2023-01-28 09:33:51
news-image

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார் நுலாண்ட்

2023-01-28 09:29:59