இலங்கையில் உயர்தரமான ஐஐடி மற்றும் வணிக உயர் கல்வியை வழங்குவதில் இணையற்ற முன்னோடியாக 1990ம் ஆண்டு முதல் செயற்படும் இன்வோர்மடிக் இன்ஸ்டிடியுட் ஒஃப் டெக்னொலஜி தனது 22வது பட்டமளிப்பு விழாவை இன்று BMICH ல் நடத்தியது.
விருதுகளைப் பெற்றுக்கொண்ட சுமார் 200 மாணவர்கள் BEng (Hons) மென்பொருள் பொறியியல், BSc (Hons) வணிக முகாமைத்துவத்துடனான தகவல் அமைப்புக்கள், மற்றும் Msc மேம்பட்ட மென்பொருள் பொறியியல் போன்ற பட்டங்களை பெற்றுக்கொண்டனர். இங்கிலாந்து வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் இளங்கலை மற்றும் முதுகலைப்பட்டங்களை இந்த மாணவர்கள் பெற்றுக்கொண்டனர்.
ரொடரி இன்டர்நஷனலின் 105வது தலைவரான இலங்கையின் முதலாவது ரொடரியன் கே.ஆர் ரவீந்திரன் இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். மேலும் இந்நிகழ்வில், வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் பிரதி துணைவேந்தர் பேராசிரியர் அலெக்ஸாண்ரா ஹியுஸ், இன்வோர்மடிக் குருப்பின் சேர்மன் டாக்டர். காமினி விக்ரமசிங்க, ஐஐடி யின் துணை நிறைவேற்று அதிகாரி டாக்டர். சம்பத் கன்னங்கர மற்றும் ஐஐடி யின் பீடாதிபதி டாக்டர். ருவன் வீரசிங்க என்பனர் கலந்து சிறப்பித்தனர்.
இப்பட்டமளிப்பு விழாவில் இவ்வருடத்திற்கான சிறந்த சாதனையாளர்களின் மத்தியில் ரயன் ஜோயல் போலியர், வணிக முகாமைத்துவத்துடனான தகவல் அமைப்புக்களிற்கான டாக்டர். காமினி விக்ரமசிங்க கல்வி சிறப்பு விருதினையும், மினோலி வெர்ஜினியா பெரேரா மென்பொருள் பொறியியலிற்கான டாக்டர். காமினி விக்ரமசிங்க கல்வி சிறப்பு விருதினையும் பிரசங்கி நிலுஷா தயாரத்ன Msc மேம்பட்ட மென்பொருள் பொறியியலிற்கான டாக்டர். காமினி விக்ரமசிங்க கல்வி சிறப்பு விருதையும் பெற்றுக்கொண்டனர்.
பட்டமளிப்பு விழாவில் உரையாற்றுகையில், ஐஐடி யின் துணை நிறைவேற்று அதிகாரி டாக்டர். சம்பத் கன்னங்கர், “ கடந்த 26 ஆண்டுகளாக இன்வோர்மடிக் இன்ஸ்டிடியுட் ஒஃப் டெக்னொலஜி ஐஐடி யானது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் வணிக துறைகளில் தரமான பிரிட்டிஷ் உயர் கல்வியை வழங்குவதில் நிகரற்ற முன்னோடியாக விளங்குகின்றது. கடந்த இரண்டரை தசாப்தங்களில், ஐஐடி பல்கலைக்கழகமானது, கிட்டத்தட்ட 25ற்கும் மேற்பட்ட நாடுகளில் தேசிய மற்றும் உள்ளுர் புளு சிப் கம்பனிகளில் உயர் பதவி வகிக்கும் 3,000ற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கல்வி கற்ற பெருமையை தன்னகத்தே கொண்டுள்ளது. ஐஐடி பல்கலைக்கழகத்திலிருந்து தேர்ச்சி பெற்று வெளியேறிய பல பட்டதாரிகள் இன்று தலைவர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்களாக உயர்வடைந்துள்ளனர். ஐஐடி பல்கலைக்கழகமானது சராசரி மாணவர்களை, துரிதமாக உருவாகும் டிஜிடல் உலகில் உயர் கோரிக்கையையுடைய அசாதாரண பட்டதாரிகளாக மாற்றுவதில் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளதால் நாம் ஒவ்வொரு மாணவர்களினதும் கல்வியில் அதிக அக்கறை காட்டுகின்றோம்.”
“நாம் எமது மாணவர்களை நிதர்சனத்திற்கு தயார்படுத்துவதுடன் எங்களது தொழிற்துறை பணியமர்த்தலானது ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த சந்தர்ப்பத்தை அவர்களிற்கு வழங்குவதன் மூலம் உறுதியான வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை பட்டதாரிகளிற்கு வழங்குகின்றது. இப்பல்கலைக்கழகத்தில் காணப்படும் உயர்தரமான கல்விக் கலாச்சாரம் இப்பல்கலைக்கழக கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக போதிக்கப்படுதலே ஐஐடி யின் தொடர்ச்சியான வெற்றிக்கு முக்கிய காரணியாக பங்களிப்புச் செய்கின்றது. 1990ம் ஆண்டு முதல் இதனது ஆரம்பத்திலிருந்து ஐஐடி பல்கலைக்கழகமானது, இதனது கல்வித்தரம் மற்றும் நல்ல தேர்ச்சி மிக்க மாணவர்களை உருவாக்குதன் காரணமாக பல்வேறுபட்ட தொழிற்துறை நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனமாக வளர்ந்துள்ளது” என்று குறிப்பிட்டார்.
ஐஐடி பல்கலைக்கழகமானது, பல உள்ளுர் மற்றும் சர்வதேச விருதுகளை பெற்றுள்ள விருது பெற்ற பல்கலைக்கழகமாக காணப்படுகின்றது. இவ்வெற்றி வரிசையை தொடர்ந்து ஐஐடி மாணவர்கள், சமீபத்தில் நடைபெற்ற 2016 தேசிய உயர் தரச்சிறப்பு மென்பொருள் விருதில் (NBQSA) மூன்றாம்நிலை - தொழில்நுட்ப பிரிவின் கீழ் வெள்ளி விருது மற்றும் சிறப்பு விருதையும், மூன்றாம்நிலை - வர்த்தக பிரிவின் கீழ் வெண்கல விருது மற்றும் சிறப்பு விருதையும் பெற்றுக்கொண்டனர்.
கடந்த சில வருடங்களில் ஐஐடி பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகளின் எண்ணிக்கையில் காணப்படுகின்ற தொடர்ச்சியான அதிகரிப்பானது இப்பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படுகின்ற கல்வி மட்டத்திற்கான முக்கிய சான்றாக காணப்படுகின்றது. இப்பல்கலைக்கழகமானது, உலக வர்த்தக பட்டதாரிகளை உருவாக்குவதன் மூலமாக இலங்கையின் தகவல் தொழில்நட்பத்துறையை வலுப்படுத்துவதிலும் முக்கிய பங்கை வகித்துள்ளது.
மேலதிக தகவல்களிற்கு www.iit.ac.lk ஐ பார்வையிடுக ஈமெயில் அனுமதி @iit.ac.lk அல்லது 0722 727272 ற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளுக.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM