உலக நாடுகளினது பொருளாதார நிலை ஆபத்தான நிலையில் - அவுஸ்திரேலியாவும் பாதிக்கப்படும் - திறைசேரி அமைச்சர்

Published By: Rajeeban

17 Oct, 2022 | 03:24 PM
image

வரவு செலவுதிட்டத்தில் அவுஸ்திரேலியாவின் எதிர்கால பொருளாதார வளர்;ச்சி  குறித்த மதிப்பீடுகளில் குறைப்புகள் இடம்பெறலாம் என திறைசேரி விவகாரங்களிற்கான அமைச்சர் ஜிம் சால்மெர்ஸ் Treasurer Jim Chalmers   தெரிவித்துள்ளார்.

சர்வதேச பொருளாதாரம் எதிர்வரும் நாட்களில் எவ்வாறானதாக காணப்படும் என்பது குறித்து வெளியாகும்  எதிர்மறையான மதிப்பீடுகள் காரணமாக அவுஸ்திரேலியாவின் , குறித்த மதிப்பீடுகளும் மாறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

உலக சந்தைகள் மற்றும் அவுஸ்திரேலியாவின வர்த்தக சகாக்கள் அபாயகரமான பாதையை எதிர்கொண்டுள்ளனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2023 இல் பிரிட்டனின் பொருளாதாரம் 0.25 வீதத்தினால் வீழ்;ச்சியடையும் என அவுஸ்திரேலிய வரவு செலவுதிட்டம் மதிப்பிடும் அமெரிக்கா ஒரு வீதத்தினால் வளர்ச்சியடையும் இந்த சர்வதேச நிலைமையிலிருந்து அவுஸ்திரேலியா தப்பாது என என திறைசேரி விவகாரங்களிற்கான அமைச்சர் ஜிம் சால்மெர்ஸ் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் வரவு செலவு திட்டம் உலகளாவிய வளர்ச்சி மற்றும் முக்கியமான பொருளாதாரங்களின் வளர்ச்சியில் சரிவை வெளிப்படுத்தும் சில நாடுகள் மந்த நிலையில் சிக்குப்படும் ஆபத்தில் உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய திறைசேரி அமைச்சர் கடந்த வாரம் ஜி20 நிதியமைச்சர்கள் சர்வதேச நாணயநிதியம் ஆகியவற்றின் பிரதிநிதிகளை சந்திப்பதற்காக வோசிங்டன் சென்றிருந்தார்.

அந்த விஜயத்தினை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ள அமைச்சர் அவுஸ்திரேலிய வரவு செலவு திட்டம் முக்கிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த எதிர்பார்ப்புகளை குறைக்கும் என தெரிவித்துள்ளார்.

உலகப்பொருளாதாரம் ஆபத்தான நிலையில் செல்கின்றது எதிர்மறையான ஆபத்துக்கள் காணப்படுகின்றன வோசிங்டனில் எனது சகாக்களுடனான சந்திப்பில் இது தெளிவாகியது என திறைசேரி அமைச்சர் தெரிவித்துள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய பிரதமர் மோடி - சுந்தர்...

2025-02-12 15:33:51
news-image

86 வயது இஸ்ரேலிய பணயக்கைதி மரணம்

2025-02-11 15:20:54
news-image

யுத்த நிறுத்தத்தை மதிப்பது மாத்திரமே இஸ்ரேலிய...

2025-02-11 13:40:13
news-image

நெடுஞ்சாலையின் பாலத்திலிருந்து கீழே விழுந்த பேருந்து...

2025-02-11 12:18:47
news-image

சனிக்கிழமை மதியத்துக்குள் ஹமாஸ் பணயக்கைதிகளை விடுதலை...

2025-02-11 11:58:38
news-image

இரும்பு, அலுமினியத்துக்கு 25% இறக்குமதி வரி:...

2025-02-11 07:37:24
news-image

கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்து தீவிரஆர்வமாக...

2025-02-10 15:56:40
news-image

ஆப்கானில் பெண் ஊடகவியலாளர்களின் வானொலிநிலையத்திற்குள் நுழைந்த...

2025-02-10 13:15:46
news-image

'ஹரி அவரது மனைவியால் ஏற்கனவே பல...

2025-02-10 11:32:27
news-image

காசா பெரும் ரியல் எஸ்டேட் பகுதி-இடித்து...

2025-02-10 11:01:36
news-image

டிரம்ப் முயற்சிக்கு முட்டுக்கட்டை யுஎஸ்எயிட்ஊழியர்களை நீக்கும்...

2025-02-09 14:04:10
news-image

டிரம்ப் கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க ஆசைப்படுவது...

2025-02-09 10:38:24