(நெவில் அன்தனி)
ஹோபார்ட், பெலேரிவ் ஓவல் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற ஐசிசி உலகக் கிண்ண பி குழுவுக்கான முதல் சுற்று (தகுதிகாண்) ஆரம்பப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை 42 ஓட்டங்களால் முற்றிலும் எதிர்பாராத விதமாக ஸ்கொட்லாந்து வெற்றிகொண்டது.
8ஆவது ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தின் ஆரம்ப நாளான ஞாயிற்றுக்கிழமை (16) முன்னாள் சம்பியன் இலங்கையை நமிபியா அதிர்ச்சி அடையச் செய்திருந்ததைத் தொடர்ந்து இந்த வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இரண்டு முன்னாள் உலக சம்பியன்கள் அடுத்தடுத்த தினங்களில் தோல்வியைத தழுவியுள்ளன.
ஆரம்ப வீரர் ஜோர்ஜ் முன்சே குவித்த நிதானமான அரைச் சதம், மார்க் வொட், மைக்கல் லீஸ்க் ஆகியோரின் மிகத் திறமையான பந்துவீச்சு என்பன மேற்கிந்தியத் தீவுகளை மண்டியிட வைத்தன.
அப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை விட ஸ்கொட்லாந்து அணி சகலதுறைகளிலும் அபரிமிதமாக பிரகாசித்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
ஸ்கொட்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 161 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 18.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 118 ஓட்டங்களை மட்டும் பெற்று அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
எட்டாவது ஓவரில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 58 ஓட்டங்களைப் பெற்று ஒரளவு பலமான நிலையில் இருந்த மேற்கிந்தியத் தீவுகள் கடைசி 8 விக்கெட்களை 60 ஓட்டங்களுக்கு இழந்தது.
மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்டத்தில் நால்வர் மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
அவர்களில் மத்திய வரிசை வீரரும் முன்னாள் அணித் தலைவருமான ஜேசன் ஹோல்டர் அதிகபட்சமாக 38 ஓட்டங்களைப் பெற்றார்.
அவரைவிட கைல் மேயர்ஸ் (20), ப்றெண்டன் கிங் (17), எவின் லூயிஸ் (14) ஆகிய மூவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணித் தலைவர் நிக்கலஸ் பூரண், ஷம்ரா ப்றூக்ஸ், ரோவ்மன் பவல் ஆகிய பிரதான வீரர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறி ஒற்றை இலக்க எண்ணிக்கைகளுடன் ஆட்டமிழந்தது அணிக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.
ஸ்கொட்லாந்து சார்பாக மிகவும் துல்லியமாக பந்துவீசிய மார்க் வொட் 4 ஓவர்களில் 12 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மைக்கல் லீஸ்க் 4 ஓவர்களில் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ப்றெட் வீல் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
அப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளினால் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஸ்கொட்லாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 160 ஓட்டங்களைக் குவித்தது.
சரியான திட்டமிடல், புத்திசாதுரியம் ஆகியவற்றுடன் ஸ்கொட்லாந்து ஓட்டங்களைப் பெற்றது. ஸ்கொட்லாந்து சார்பாக துடுப்பெடுத்தாடிய 7 பேரில் இருவரைத் தவிர மற்றைய ஐவரும் 15 ஓட்டங்களுக்கு மேல் பெற்றதுடன் ஜோர்ஜ் முன்சேயின் துடுப்பாட்டும் எடுத்துக்காட்டாக அமைந்தது.
நிதானம் கலந்த வேகத்துடன் மிகவும் சாதுரியமாக துடுப்பெடுத்தாடிய
ஜோர்ஜ் முன்சே ஆட்டமிழக்காமல் 66 ஓட்டங்களைப் பெற்றார்.
அத்துடன் கெலம் மெக்லியொட் 23 ஓட்டங்களையும் மைக்கல் ஜோன்ஸ் 20 ஓட்டங்களையும் கிறிஸ் க்றீவ்ஸ் ஆட்டமிழக்காமல் 16 ஓட்டங்களையும் அணித் தலைவர் ரிச்சி பெறிங்டன் 16 ஓட்டங்களையும் பெற்றனர்.
மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சில் ஜேசன் ஹோல்டர் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அல்ஸாரி ஜோசப் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM