மேற்கிந்தியத் தீவுகளுக்கு 161 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஸ்கொட்லாந்து

Published By: Digital Desk 5

17 Oct, 2022 | 01:07 PM
image

(என்.வீ.ஏ.)

ஹோபார்ட், பெலேரிவ் ஓவல் விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்றுவரும் ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண பி குழுவுக்கான முதலாம் சுற்றின் ஆரம்பப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு 161 ஓட்டங்களை வெற்றி இலக்காக ஸ்கொட்லாந்து நிர்ணயித்துள்ளது.

இந்நிலையில் தற்போது 10 ஓவர்கள் நிறைவில் 4  விக்கெட்டுக்களை இழந்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் 69 ஓட்டங்களைப் பெற்று தடுமாறி வருகின்றது.

அப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளினால் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஸ்கொட்லாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 160 ஓட்டங்களைக் குவித்தது.

ஆரம்ப வீரர் ஜோர்ஜ் முன்சே நிதானத்தடன் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்ததன் பலனாக  எதிரணிக்கு சவால் விடுக்கக்கூடிய மொத்த எண்ணிக்கையை  ஸ்கொட்லாந்து,   பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஜோர்ஜ் முன்சே ஆட்டமிழக்காமல் 66 ஓட்டங்களையும் கெலம் மெக்லியொட் 23 ஓட்டங்களையும் மைக்கல் ஜோன்ஸ் 20 ஓட்டங்களையும் கிறிஸ் க்றீவ்ஸ் ஆட்டமிழக்காமல் 16 ஓட்டங்களையும் அணித் தலைவர் ரிச்சி பெறிங்டன் 16 ஓட்டங்களையும் பெற்றனர்.

மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சில் ஜேசன் ஹோல்டர் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அல்ஸாரி ஜோசப் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இன்னும் சற்று நேரத்தில் மேற்கிந்தியத் தீவுகள் பதிலுக்கு துடுப்பெடுத்தாடவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தரங்க, டில்ஷான் துடுப்பாட்டத்தில் அசத்தல் :...

2023-03-21 17:16:15
news-image

பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக...

2023-03-21 14:58:47
news-image

WPL: டெல்ஹியிடம் பணிந்தது மும்பை

2023-03-21 12:53:50
news-image

WPL: குஜராத்தை வென்று ப்ளே ஓவ்...

2023-03-21 11:50:19
news-image

ராஜஸ்தான் செல்லும் வியாஸ்காந்த்

2023-03-21 09:47:45
news-image

19இன் கீழ் மும்முனை ஒருநாள் கிரிக்கெட்...

2023-03-21 09:18:28
news-image

மரித்துப்போன கால்பந்தாட்டத்திற்கு உயிர் கொடுக்க நண்பர்களாக...

2023-03-20 20:53:51
news-image

லெஜென்ட்ஸ் லீக் இறுதிப் போட்டியில் ஏசியா...

2023-03-20 15:14:33
news-image

சிட்டி லீக் 1ஆம் பிரிவு :...

2023-03-20 13:39:27
news-image

டெஸ்ட் அணியின் தலைமை பொறுப்பிலிருந்து விலகுகின்றார்...

2023-03-20 16:12:31
news-image

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகள்...

2023-03-20 13:26:54
news-image

இலங்கையை இன்னிங்ஸால் வீழ்த்திய நியூஸிலாந்து டெஸ்ட்...

2023-03-20 12:09:34